மு.க.அழகிரி மவுனத்தைக் கலைத்தால் திமுகவில் மிகப் பெரிய பூகம்பம் வெடிக்கும்:அமைச்சர் உதயகுமார் ஆரூடம்
தற்போது மௌனத்தில் இருக்கும் மு.க.அழகிரி தனது மௌனத்தை கலைத்தார் என்றால் திமுகவில் மிகப் பேரிய பூகம்பம் வெடிக்கும் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மவுனத்தைக் கலைத்தால் திமுகவில் மிகப் பெரிய பூகம்பம் வெடிக்கும் என்று தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் உணவு வழங்கப்பட்டு வருகிறது அதன் ஐம்பதாவது நாளான இன்று, அமைச்சர் ஆர் பி உதயகுமார் அதனைப் பார்வையிட்டார் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையின் படி தான் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது தமிழுக்கு பாதிப்பு ஏற்படாமல் அதன் செழுமைக்கு இந்த அரசு என்றும் பாடுபடும் என்று கூறினார்.

மதுரை இரண்டாவது தலைநகர் என்ற எங்களது கருத்தை நாங்கள் பதிவு செய்துள்ளோம் இதுகுறித்து தமிழக முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார். அமைச்சர் பதவியை விட மதுரை இரண்டாம் தலைநகர் என்ற எனது கோரிக்கைக்கு நான் முக்கியத்துவம் அளிப்பேன்.
முதல்வர் என்னை அழைத்து பதவி முக்கியமா? தென் மாவட்ட வளர்ச்சி முக்கியமா என்று கேட்டால் நாள் வளர்ச்சி முக்கியம் என்று சொல்லி என் பதவியை துறப்பேன் என்று சொன்னார். அடுத்த முதல்வர் யார் என்று தலைமை கழகம் கூடி முடிவெடுக்கும் அதுகுறித்து எங்கும் கருத்து சொல்லக்கூடாது என்பது தலைமையின் கட்டளை என்றும் சொன்னார் உதயகுமார்.
இத்தனை மாதங்களாக திமுகவின் பொதுச்செயலாளர் பதவி ஏன் இதுவரை நிரப்பப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் உதயகுமார் அந்த கட்சியில் தலைவர்கள் தான் அதிகமாக உள்ளனர் தொண்டர்கள் இல்லை. அவர்கள்தான் அதிமுகவை பற்றி குறை கூறுகிறார்கள் என்று சொன்னார்.
தற்போது மௌனத்தில் இருக்கும் மு.க.அழகிரி தனது மௌனத்தை கலைத்தார் என்றால் திமுகவில் மிகப் பெரிய பூகம்பம் வெடிக்கும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள், முதல்வர் விழாவில் பங்கேற்கலாம். ஆனால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து விட்டு வர வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications