Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிருப்தியில் அழகிரி ஆதரவாளர்கள்.. வாரிசு தலைவரின் ரெட் கார்டு! அந்த கட்சியில் சேரப் போறாங்களாமே?

Subscribe to Oneindia Tamil

மதுரை: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மீண்டும் தங்களை கட்சி பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் கடிதம் கொடுத்திருக்கின்றனர். இந்த நிலையில் திமுக தலைமை எந்தவித சிக்னலும் கொடுக்காததால் அவர்கள் தமிழக வெற்றிக் கழக தரப்புக்கு தாவை இருப்பதாக சொல்லப்படுகிறது.

கலைஞர் கருணாநிதி காலத்தில் டெல்லிக்கு முரசொலி மாறன், சென்னைக்கு மு க ஸ்டாலின், மதுரைக்கு மு.க.அழகிரி என்றுதான் இருந்தது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஆன கருணாநிதியின் மூத்த மகனான அழகிரி தென்மண்டல அமைப்பு செயலாளராகவும் இருந்தார்.

திருமங்கலம் இடைத்தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்த திருமங்கலம் ஃபார்முலாவை அறிமுகப்படுத்தியதும் அவர்தான். அதற்குத்தான் அந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டது. சென்னையில் பிறந்து வளர்ந்த அழகிரி மதுரை அரசியலை நிரந்தரமாக்கிக் கொண்டார்.

MK Alagiri Tamilaga Vetri Kazhagam DMK

மு.க.அழகிரி ஆதரவாளர்கள்

திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என தென் மாவட்டங்களில் அவருக்கு பெரிய ஆதரவாளர் வட்டம் இருந்தது. இதற்கிடையே கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் தான் அரசியல் வாரிசு என்பதை உணர்ந்த பல திமுக புள்ளிகள் ஸ்டாலின் பக்கம் சாய்ந்து விட்டனர். இடையில் நாளேடு ஒன்றின் கருத்துக்கணிப்பு திமுகவில் மிகப்பெரிய புகைச்சலை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள் தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் முக அழகிரி.

திமுக உட்கட்சி அரசியல்

அவருடன் சேர்த்து அவரது ஆதரவாளர்களான மன்னன், இசக்கி முத்து, முபாரக் மந்திரி, திருப்பரங்குன்றம் கார்த்திகேயன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கலைஞர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு சென்னையில் பிரம்மாண்டமான ஒரு பேரணியை நடத்தி காட்டினார் அழகிரி. திமுக ஆட்சி அமைந்த போதும் அவருக்கு கட்சி பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் சகோதரர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதும், மதுரை செல்லும் போதெல்லாம் உதயநிதி ஸ்டாலின் முக அழகிரி சந்திப்பதும் வழக்கமாகி வந்தது.

'வாரிசு' தலைவர்

இதற்கிடையே கட்சியிலிருந்து நீக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும் திமுக அனுதாபிகளாகவே தாங்கள் தொடர்வதாகவும் தங்களை திமுகவின் சேர்த்து கட்சி பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென சமீபத்தில் மதுரை சென்ற திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலினிடம் கடிதம் கொடுத்தார் மன்னன்.இருந்த போதும் தற்போது வரை அவருக்கு கட்சிப் பணியாற்ற சிக்னல் கிடைக்கவில்லை. திமுகவின் 'வாரிசு' தலைவர் ஒருவர் அழகிரியின் ஆதரவாளர்கள் மீண்டும் கட்சிக்குள் வருவதை விரும்பவில்லை என சொல்லப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம்

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு முக அழகிரி தீவிர ஆதரவாளராக இருந்த திருப்பரங்குன்றம் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் தமிழக வெற்றி கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்தார். மேலும் மூக்க அழகிரியின் ஆதரவாளர்கள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மு.க.அழகிரியின் முக்கிய ஆதரவாளர்கள் சிலர் வரும் நாட்களில் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என சொல்லப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தல்

திமுக தலைமையும் கண்டுகொள்ளாத நிலையில் இரண்டு சட்டமன்ற தேர்தல்களை பங்கேற்க முடியவில்லை. வரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் அல்லது உள்ளாட்சித் தேர்தலிலாவது தங்கள் ஆதரவாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்த முடிவை அழகிரியின் முக்கிய ஆதரவாளர்கள் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் யார்? யார்? எப்போது? தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+