யார் வெற்றி பெற வேண்டும்... திமுகவினரை அதிரவைத்த மு.க.அழகிரியின் பேட்டி
Recommended Video
மதுரை: யார் வெற்றி பெற வேண்டும் என மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி வாக்களித்த பின் பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சியை தீர்மானிக்கும் வகையில் இன்று மக்களவை தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்து வருகிறது.

இந்த தேர்தலில் காலை 7 மணியில் இருந்தே தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது சொந்த ஊரில் வாக்களித்து வருகிறார்கள். மதுரை ஆயிர வைசியர் பள்ளி வாக்குச்சாவடியில் மதுரை ஆதீனம் வாக்களித்தார். இதேபோல் அமைச்சர் செல்லுர் ராஜு தனது குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரியில் வாக்களித்தார்.
அந்த வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, யார் வெற்றி பெற வேண்டும் என மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
முன்பெல்லாம் தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்தால் அழகிரி, திமுகவே வெற்றி பெறும் என்றும், மக்கள் திமுகவின் பக்கமே நிற்பார்கள் என்றும் கூறுவார். ஆனால் ஸ்டாலினுடனான அதிகாரப்போட்டியால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் மு.க.அழகிரி, இப்போது அளித்த பேட்டியில், யார் வெற்றி பெற வேண்டும் என மக்களே தீர்மானிப்பார்கள் என பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு சென்றுள்ளதை கேட்டு திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications