மதுரைக்கு வந்தார் பிரதமர் மோடி.. என்னென்ன நிகழ்ச்சிகள்.. வாகன பயணிகள் கவனத்திற்கு
மதுரை: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு வந்தார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை தர உள்ளார், இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பிய பிரதமர் மோடி பிற்பகல் 2 மணிக்கு சூலூருக்கு வருகை தந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் வந்தடைந்தார்.

மாதப்பூரில் நடைபெற்ற என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றார் மோடி. இந்த விழாவிற்காக தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் 5 லட்சம் பேர் அமர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் பேசிய மோடி தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் இதயங்களில் இடம் பிடித்துள்ளதாக கூறினார்.
என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பல்லடத்தில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்தார். அங்கு சிறு குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கதிட்ட கருத்தரங்கில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து இரவு மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்யும் மோடி மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை காலை மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடிக்கு செல்கிறார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையிலும் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இன்றும் நாளையும் திருச்சியில் இருந்து மதுரை வரும் வாகனங்கள் ஒத்தக்கடை வழியாக மாட்டுத்தாவணி செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து தூத்துக்குடி விருதுநகர், நெல்லைக்கு செல்லும் வாகனங்கள் ஒத்தக்கடை வழியாக செல்லும்.
காரைக்குடி, சிவகங்கையில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் பூவந்தி வழியாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும். ராமநாதபுரத்தில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் சக்குடி பாலம் வழியாக சென்றடையும். தூத்துக்குடியில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் ஏ.முக்குளம் சந்திப்பு வழியாக சென்றடையும் என அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications