அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய ரெடி.. அண்ணாமலை என்னோட சவாலை ஏற்க ரெடியா? அமைச்சர் மூர்த்தி அறைகூவல்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தன் மீதான குற்றச்சாட்டை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிரூபித்துவிட்டார் என்றால், அமைச்சர் பதவியிலிருந்தே விலகிக் கொள்வதாக மூர்த்தி பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

Recommended Video

    அண்ணாமலை என்னோட சவாலை ஏற்க ரெடியா? அமைச்சர் மூர்த்தி அறைகூவல்

    ஆனால் அதே வேளையில் தன் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறினால் பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை பதவி விலகிக் கொள்வாரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

    வணிக வரித்துறையில் பணியிட மாறுதலுக்கு அமைச்சர் மூர்த்தி பணம் பெறுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஒரு வார காலம்

    ஒரு வார காலம்

    திமுக அமைச்சர்கள் மீது வரிசையாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த ஒரு வார காலமாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பால் மவுனம் காத்து வந்தார். இப்போது மீண்டும் திமுகவை நேரடியாக அட்டாக் செய்ய ஆரம்பித்துள்ளார். கடந்த வாரங்களில் மின்சாரத்துறை அமைச்சர், பால்வளத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் மீது ஊழல் புகார்களை கூறிய அண்ணாமலை இந்த வாரம் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மீது பாய்ந்திருக்கிறார்.

    பணம் வாங்கிக்கொண்டு

    பணம் வாங்கிக்கொண்டு

    வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறையில் முறைகேடுகள் நிகழ்வதாகவும் அதிகாரிகள் பணிமாறுதலுக்கு அமைச்சர் மூர்த்தி பணம் வாங்கிக்கொண்டு ஒப்புதல் அளிப்பதாகவும் அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ள அமைச்சர் மூர்த்தி, தன் மீதான குற்றச்சாட்டை அண்ணாமலை நிரூபித்துவிட்டார் என்றால், அமைச்சர் பதவியிலிருந்தே விலகிக் கொள்வதாக மூர்த்தி பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

     அண்ணாமலைக்கு கேள்வி

    அண்ணாமலைக்கு கேள்வி

    ஒரு வேளை தன் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறினால் பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை பதவி விலகிக் கொள்வாரா என அமைச்சர் மூர்த்தி வினவியுள்ளார். அமைச்சர்கள் மீது ஆதாரங்களின்றி ஊழல் குற்றஞ்சாட்டுவதை அண்ணாமலை வழக்கமாக வைத்துள்ளார் என்றும் அதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் கூறியிருக்கிறார்.

    ஜூலை மாதம்

    ஜூலை மாதம்

    இதனிடையே இப்போது வாய்மொழியாக ஊழல் புகார் கூறி வரும் அண்ணாமலை, வரும் ஜூலை மாதத்தில் சில ஆவணங்களோடு இதனை வெளிச்சத்துக்கு கொண்டு வருவார் எனக் கூறுகிறார் பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி. இதனால் திமுக பாஜக இடையேயான எதிரெதிர் அரசியல் அனல் பறக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+