'தைரியமா இரு.. நாங்க எல்லோரும் இருக்கோம்' மீனாட்சிக்கு ஆறுதல் சொன்ன தாய், நண்பன்!
மதுரை: தனிஷ்க் நகைக் கடை கொள்ளையில் கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் மீனாட்சி நாச்சியாருக்கு அவரின் தாய் மற்றும் நண்பர் அட்வைஸ் செய்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அதில், தைரியமா இரு.. பயப்படாத.. நாங்கள் எல்லோரும் இருக்கோம்.. என்ன நடந்ததோ, அதை நீதிபதியிடம் சொல்லு என்று பேசும் காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக் கடையில் 15 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. கடைசி லிப்ட் அமைக்க வைக்கப்பட்டிருந்த துவாரம் வழியாக நுழைய நபர், கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணையில், நகைக் கடையில் கொள்ளை அடித்தது பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவை சேர்ந்த நிஷாந்த் என்பது தெரிய வந்தது.

நிஷாந்த் தலைமறைவாக இருந்த சூழலில், ஆட்டோ ஓட்டுநரான ஆரின் தந்தை சுரேஷிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதன்பின் நிஷாந்த் கொள்ளையடித்த போது அணிந்திருந்த உடையை தீயிட்டு எரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின் நிஷாந்த் தோழியான இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் மீனாட்சி நாச்சியாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது நிஷாந்த் பதுக்கி வைத்திருந்த நகைகளை மீனாட்சி நாச்சியார் அடையாளம் காட்டினார். அவரை கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்ற போலீசார், அங்கு புதைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கைப்பற்றினர். தொடர்ந்து நிஷாந்த் தந்தை சுரேஷ், மீனாட்சி நாச்சியார் ஆகியோர் போலீசார் கைது செய்தனர்.
இதன்பின் இருவருக்கும் நவம்பர் 29 வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சங்கீதா உத்தரவிட்டார். இதனிடையே நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மீனாட்சி நாச்சியாரை காவலர்கள் அழைத்து வந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
அப்போது மீனாட்சி நாச்சியாரின் தாய் மற்றும் நண்பர் தரப்பில், மீனாட்சி.. என்ன நடந்ததோ, அதனை நீதிபதியிடம் சொல்லு.. 5 நிமிடம் நேரம் கொடுங்கள்.. நான் எல்லாவற்றையும் சொல்கிறேன் என்று கிளியராக சொல்லிவிடு.. அழுகாதே.. தைரியமா இரு.. பயப்படாத.. நாங்க எல்லோரும் இருக்கோம்.. சரியா.. பொறுமையாக என்ன நடந்ததோ சொல்லி.. ஃபீல் பண்ணாத என்று அட்வைஸ் செய்தனர்.



Click it and Unblock the Notifications
