“அனுமான்தான் முதலில் விண்வெளிக்கு போனாரா? அப்போ முப்பத்தி முக்கோடி தேவர்கள்?” சு.வெங்கடேசன் கேள்வி
மதுரை: தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளி மாணவர்களிடையே பாஜக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர், உரையாடியிருந்தார். அப்போது அவர் உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமான் என்று கூறியிருந்தார்.
இது தொடர்பான வீடியோ விவாதங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், "பாஜகவினரின் அறிவு நாளுக்குநாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி.சு.வெங்கடேசன் விமர்சித்திருக்கிறார்.

தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, இமாச்சலப் பிரதேசத்தின் உனாவில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் மாணவர்களுடன் அனுராக் உரையாற்றினார். அப்போது மாணவர்களிடம்,விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்? என கேள்வி எழுப்பியிருந்தார்.
மாணவர்கள்: ஒருமித்த குரலில் "நீல் ஆம்ஸ்ட்ராங்" என பதிலளித்தனர்.
அனுராக் தாக்கூர்: "எனக்குத் தெரிந்து ஹனுமான்ஜி தான் விண்வெளிக்கு சென்றார்" என கூறியிருந்தார்.
இந்த உரையாடல் வீடியோவாக வெளியான நிலையில், அனுராக் தாக்கூர் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. உலகின் முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின். சோவியத் யூனியைனை (ரஷ்யா) சேர்ந்த இவர், கடந்த 1961ம் ஆண்டு சோவியத் ரஷ்யவின் வோஸ்டோக் 1 விண்கலம் மூலம் 327 கி.மீ உயரத்திற்கு பறந்து சென்றார். 108 நிமிடங்கள் வரை அவர் விண்வெளியில் பூமியை சுற்றி வந்தார். இவரை தொடர்ந்து நான்கு மாதங்கள் கழித்து மற்றொரு வீரர் விண்வெளிக்கு பயணிதிருந்தார். அவரும் சோவியத்தை சேர்ந்தவர்தான். அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங் விண்வெளிக்கு சென்ற 21வது நபர்.
இந்த தகவலை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து, அனுராக் தாக்கூருக்கு பாடம் எடுக்க தொடங்கியிருக்கிறார்கள் நெட்டிசன்கள். இந்நிலையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி.சு.வெங்கடேசன், அனுராக் தாக்கூரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திக்கிறார்.
"முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாக்கூர் கண்டறிந்துள்ளது சாதாரண விஷயமல்ல, பாஜக வினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது.
நீல் ஆம்ஸ்டிராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்" என தனது x தளத்தில் வெங்கடேசன் பதிவிட்டிருக்கிறார்.
இந்தியாவிலிருந்து முதன் முதலில் விண்வெளிக்கு சென்றவர் ராகேஷ் ரஷ்மா. இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அவரை, சோவியத் ரஷ்யா விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. இதனையடுத்து சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியரான சுபான்ஷு சுக்லா தற்போது விண்வெளிக்கு சென்று திருப்பியிருக்கிறார். ரோபோக்களை விண்வெளிக்கு அனுப்புவதை விட, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது மிகப்பெரிய சாதனையாக ஒருபுறம் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் உளவியல் ரீதியில் இந்த சாதனை சாமானிய மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அப்படித்தான் சுபான்சு சுக்லாவின் பயணம் சமானிய மக்களிடமும், குறிப்பாக மாணவர்களிடம் விண்வெளி குறித்த ஆர்வத்தை அதிகரித்திருக்கின்றன. நம்மாலும் விண்வெளிக்கு போக முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் அனுராக் தாக்கூரின் பேச்சு, இந்த நம்பிக்கையை தகர்ப்பதாக இருக்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றனர்.
அனுராக் தாக்கூர் கருத்து குறித்த நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே?
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications