முல்லைப் பெரியாறு அணை: கேரளா அமைப்பைக் கண்டித்து தமிழக விவசாயிகள் குமுளி முற்றுகை- எல்லையில் பதற்றம்
மதுரை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை முன்வைத்து குமுளியில் கேரளா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதற்கு பதிலடியாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கோரி குமுளி தமிழக எல்லையில் தமிழ்நாட்டு விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர். இதனால் தமிழ்நாடு- கேரளா மாநிலங்கள் எல்லையான குமுளியில் பதற்றம் ஏற்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை முன்வைத்து கேரளா நீண்டகாலமாக அரசியல் செய்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவே இருக்கிறது என உச்சநீதிமன்றம் பலமுறை தெரிவித்துவிட்டது; பல்வேறு வல்லுநர்கள் குழுவும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவே இருக்கிறது என திட்டவட்டமான அறிக்கைகளைக் கொடுத்துவிட்டன.

அண்மையில் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை டிஸ்மிஸ் செய்த உச்சநீதிமன்றம், எத்தனை பருவமழைகளை எதிர்கொண்டு தாங்கி நிற்கிறது முல்லைப் பெரியாறு அணை; முல்லைப் பெரியாறு அணையை இவ்வளவு வலுவாக கட்டியவர்களை நாம் பாராட்ட வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வலியுறுத்தி கேரளாவைச் சேர்ந்த அமைப்பு ஒன்று குமுளியில் போராட்டம் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமுளியைப் பொறுத்தவரையில் இரு மாநில சோதனைச் சாவடிகளும் அருகே அமைந்துள்ளன. 2011-ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை வெடித்த போது குமுளியில் இரு மாநில அரசுகளுமே போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. தமிழக விவசாயிகள், லோயர்கேம்ப் பகுதியிலும் கேரளாவை சேர்ந்தவர்கள் வண்டி பெரியாரிலும் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் இந்த நடைமுறையை மீறி திடீரென குமுளியில் கேரளா அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் தமிழக விவசாயிகள் கொந்தளித்தனர். கேரளா அமைப்பினருக்கு பதிலடி தரும் வகையில் தமிழ்நாட்டு விவசாயிகள் நேற்று லோயர்கேம்ப்பில் இருந்து குமுளியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். ஆனால் போலீசார் தமிழ்நாட்டு விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் தமிழ்நாடு- கேரளா எல்லையான குமுளியில் பதற்றம் ஏற்பட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications