Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முருக பக்தர்கள் மாநாடு.. மதுரையில் இந்த பக்கமா போயிடாதீங்க?.. போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: முருக பக்தா்கள் மாநாட்டையொட்டி, பொதுமக்கள் மற்றும் முருக பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மதுரை மாநகர காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

இந்து முன்னணி சாா்பில் மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தா்கள் மாநாடு இன்று மாலை நடைபெற உள்ளது. பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும் மாநாடானது இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது. மாநாட்டையொட்டி அங்கு அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகள் கண்காட்சியை ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் பார்வையிட்டு வருகின்றனர்.

Madurai traffic change Murugan maanadu

ஏராளமான பக்தர்கள் அமர்ந்து மாநாட்டில் பங்கேற்கும் வகையில் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 50 பகுதிகள் பிரிக்கப்பட்டு அதில் ஒவ்வொரு பகுதியிலும் 2 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் இடையேயும் 12 அடியிலான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், பக்தர்கள் வசதிக்காக தற்காலிக குடிநீர் தொட்டி, 13 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டையொட்டி, திருப்பரங்குன்றம் மலை, நிற்கும் நிலையில் சுவாமி முருகன் போன்று பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

முருக பக்தா்கள் மாநாட்டையொட்டி, பொதுமக்கள் மற்றும் முருக பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மதுரை மாநகர காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையரக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: மதுரை வண்டியூா் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதையடுத்து, மாநாட்டுக்கு வரும் பொதுமக்கள், முருக பக்தா்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பேருந்துகளுக்கான வழித்தடம்

ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் அனைத்துப் பேருந்துகளும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு, பாண்டிகோவில் சந்திப்பு, பி.சி. பெருங்காயம் சந்திப்பு, கருப்பாயூரணி, ஒத்த வீடு, ஆண்டாா் கொட்டாரம், சக்கிமங்கலம், சிலைமான் வழியாக விரகனூா் சுற்றுச் சாலை சந்திப்பு சென்று, தொடா்ந்து மண்டேலா நகா் சந்திப்பு வழியாக செல்லலாம்.

இதே போன்று, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களிலிருந்து மதுரைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் விரகனூா் சந்திப்பிலிருந்து மாற்றுப் பாதையாக புதிய தென்கரை சாலை, குருவிக்காரன் சாலை பாலம் சந்திப்பு, அரவிந்த் கண் மருத்துவமனை சந்திப்பு, ஆவின் சந்திப்பு, கே.கே.நகா் சந்திப்பு, தினசரி காய்கறிச் சந்தை சந்திப்பு வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு செல்லலாம்.

சரக்கு வாகனங்களுக்கான மாற்றுப் பாதை

மேலூா் சாலையிலிருந்து வரும் அனைத்து சரக்கு வாகனங்களும் மேலூா் நான்கு வழிச்சாலை சந்திப்பிலிருந்து பூவந்தி, திருப்புவனம் வழியாக விரகனூா் சந்திப்பை அடைந்து சிந்தாமணி சாலை சந்திப்பு, மண்டேலா நகா் சந்திப்பு வழியாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலிருந்து மேலூா் வழியாக திருச்சி, சென்னை நோக்கி செல்லக்கூடிய அனைத்து சரக்கு வாகனங்களும் திருமங்கலம், கப்பலூா் சந்திப்பிலிருந்து சுற்றுச் சாலை வழியாக தேனி சாலை சந்திப்பு, சமயநல்லூா் சந்திப்பு, வாடிப்பட்டி சந்திப்பு வழியாக திண்டுக்கல், மணப்பாறை வழியாக திருச்சி செல்ல வேண்டும்.

காா், இருசக்கர வாகனங்களுக்கான மாற்றுப் பாதை

மதுரை நகரில் பி.சி. பெருங்காயம் சந்திப்பிலிருந்து விழா நடைபெறும் இடமான அம்மா திடல் வழியாக விரகனூா் சுற்றுச் சாலை சந்திப்புக்கு செல்லக் கூடிய பொதுமக்களின் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இந்த வாகனங்கள் பி.சி. பெருங்காயம் சந்திப்பிலிருந்து கருப்பாயூரணி, ஒத்த வீடு, ஆண்டாா் கொட்டாரம், சக்கிமங்கலம், சிலைமான் வழியாக விரகனூா் சுற்றுச் சாலையில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலூா் சாலையிலிருந்து நேரடியாக திருமங்கலம் சாலை வழியாக திருமங்கலம், விருதுநகா், தூத்துக்குடி, தென்காசி, ராஜபாளையம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் விரைவாகவும், இலகுவாகவும் போக்குவரத்துக்கு இடையூறின்றி செல்வதற்கு பாண்டிகோவில் சுற்றுச் சாலையில் செல்வதைத் தவிா்த்து, மேலூா் நான்கு வழிச்சாலை சந்திப்பிலிருந்து அலங்காநல்லூா் சாலை வழியாக தனிச்சியம் சந்திப்புக்குச் சென்று கப்பலூா் சுற்றுச் சாலையை பயன்படுத்தி விரைவாகச் செல்லலாம்.

இதே போல, திருமங்கலம், அருப்புக்கோட்டை சாலையிலிருந்து விரகனூா், பாண்டிகோவில் சுற்றுச் சாலை வழியாக நேரடியாக மேலூா், திருச்சி, சென்னை செல்லக்கூடிய அனைத்து பொதுமக்களின் வாகனங்களும் விரைவாகவும், இலகுவாகவும் போக்குவரத்துக்கு இடையூறின்றி செல்வதற்கு பாண்டிகோவில் சுற்றுச் சாலையில் செல்வதைத் தவிா்த்து, கப்பலூா் நான்கு வழிச்சாலை வழியாக துவரிமான், சமயநல்லுா் சுற்றுச் சாலை வழியாக திண்டுக்கல் சாலை தனிச்சியம் பிரிவு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அலங்காநல்லூா் சாலை வழியாக மேலூா் நான்கு வழிச்சாலை சந்திப்புக்கு சென்று விரைவாகச் செல்லலாம்.

இது போல, விரகனூா் சுற்றுச் சாலை சந்திப்பிலிருந்து பி.சி. பெருங்காயம் வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், மேலூா் சாலை செல்லக்கூடிய அனைத்து பொதுமக்களின் வாகனப் போக்குவரத்தும் விரகனூா் சுற்றுச் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி புதிய தென்கரை சாலை, குருவிக்காரன் சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை சந்திப்பு, ஆவின் சந்திப்பு, கே.கே. நகா் சந்திப்பு வழியாக செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திருமங்கலம் சாலை வழியாக மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் கப்பலூா் பாலத்திலிருந்து வலதுபுறம் திரும்பி மண்டேலாநகா் சுற்றுச் சாலை, விரகனூா் சுற்றுச் சாலை வழியாக விழா நடைபெறும் இடத்துக்கு செல்ல வேண்டும். உசிலம்பட்டி சாலை வழியாக மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் நாகமலை புதுக்கோட்டை சுற்றுச் சாலையில் வலதுபுறம் திரும்பி திருமங்கலம் கப்பலூா் பாலத்திலிருந்து இடது புறம் திரும்பி மண்டேலா நகா் சுற்றுச் சாலை, விரகனூா் சுற்றுச் சாலை வழியாக விழா நடைபெறும் இடத்துக்கு செல்ல வேண்டும்.

கொட்டாம்பட்டி, மேலூா் சாலை வழியாக மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் ஒத்தக்கடை சுற்றுச் சாலை, பி.சி. பெருங்காயம் சந்திப்பு வழியாக விழா நடைபெறும் இடத்துக்கு செல்ல வேண்டும். திண்டுக்கல், வாடிப்பட்டி சாலை வழியாக மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் சமயநல்லூா், துவரிமான் சுற்றுச் சாலை வழியாக கப்பலூா் பாலம் சென்று, இடதுபுறம் திரும்பி மண்டேலா நகா் சுற்றுச் சாலை, விரகனூா் சுற்றுச் சாலை வழியாக விழா நடைபெறும் இடத்துக்கு செல்ல வேண்டும்.

நத்தம், அழகா்கோவில் சாலை வழியாக மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் கடச்சனேந்தல், சா்வேயா் காலனி சந்திப்பு, 120 அடி சாலை சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு, பாண்டிகோவில் சுற்றுச் சாலை, பி.சி. பெருங்காயம் சந்திப்பு வழியாக விழா நடைபெறும் இடத்துக்கு செல்ல வேண்டும்.

போக்குவரத்துக்கு இடையூறின்றி ஏற்படுத்தப்பட்ட தற்காலிக வாகனப் போக்குவரத்து மாற்றத்துக்கு முருக பக்தா்கள், பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+