கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.. சிவகங்கையில் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் உடல் நலக்குறைவு
மதுரை: இசை அமைப்பாளர் கங்கை அமரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பில் பங்கேற்க சிவகங்கை சென்று இருந்த கங்கை அமரனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிவகங்கையில் முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
தமிழக திரையுலகில் இசையமைப்பாளர், இயக்குனர் என தனக்கென தனி இடம் பிடித்து இருப்பவர் கங்கை அமரன். கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ள கங்கை அமரன், இசைஞானி இளையராஜாவின் சகோதரர் ஆவார். 77-வயதான கங்கை அமரன் சிவகங்கை அருகே நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்க சென்று இருந்தார்.

மானாமதுரை மற்றும் சிவகங்கை சுற்று வட்டாரப்பகுதிகளில் ஷூட்டிங்க் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்று இருந்த கங்கை அமரனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, கங்கை அமரன் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
இதனை அடுத்து மேல் சிகிச்காக மதுரைக்கு காரில் அழைத்து செல்லப்பட்டார். கங்கை அமரன் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பது தகவலால் அவரது உறவினர்கள், திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மௌன கீதங்கள் மற்றும் வாழ்வே மாயம் போன்ற பல படங்களுக்கு கங்கை அமரன் இசை அமைத்துள்ளார். கோழி கூவுது என்ற படத்தின் மூலம் 1982 ஆம் ஆண்டு ஆண்டு இயக்குனராகவும் கங்கை அமரன் அறிமுகம் ஆனார். மேலும் மிகவும் வெற்றிகரமான கரகாட்டக்காரன் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார்.
1997- ஆம் ஆண்டு வெளியான தெம்மாங்கு பாட்டுக்காரன் படத்திற்கு பிறகு இவர் படங்கள் எதையும் இயக்கவில்லை. கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு தமிழக திரையுலகில் முன்னணி இயக்குனராக உள்ளார். பிரேம்ஜி அமரன் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications