“தி தமிழ்நாடு ஸ்டோரி”.. விபத்தால் இருண்ட உமாவின் எதிர்காலம்! முஸ்லிம்கள் உதவியால் +2 தேர்வில் சாதனை
மதுரை: விபத்தில் சிக்கி கை, கால்கள் முறிந்து படுத்த படுக்கையான நிலைக்கு சென்ற உமா மகேஸ்வரி என்ற 12 ஆம் வகுப்பு மாணவி, இஸ்லாமியர்களின் உதவியால் சிகிச்சை பெற்று பொதுத்தேர்வில் 543 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் 3 வது இடத்தை பிடித்து இருக்கிறார்.
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்தன. இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் 12 ஆம் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் மாநில அளவில், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் மதுரை திருமங்களத்தை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி உமா மகேஸ்வரி தேர்வுக்கு 4 மாதங்களுக்கு முன்பாக பெரும் விபத்து ஒன்றில் சிக்கி, அதிலிருந்து மீண்டு பள்ளிக்கூட அளவில் 3 வது இடத்தை பிடித்து இருக்கிறார். அவர் பெற்ற மதிப்பென் 600க்கு 543. கூலித் தொழிலாளியின் மகளான உமா மகேஸ்வரி, வீட்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து கை, கால்கள் முடிந்து படுத்த படுக்கையான நிலைக்கு சென்றார்.
மாணவி விபத்தால் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்து தேர்வில் சாதித்ததன் பின்னணியில் தமிழ்நாட்டில் நிலவும் மத நல்லிணக்கம் ஒரு காரணமாக இருக்கிறது. யூடியூபர் ஒருவரின் உதவியால் நிதி திரட்டப்பட்டு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இந்த விபத்தில் இருந்து மீண்டு மாணவி சாதித்து இருக்கிறார்.
இதுகுறித்து புகாரி ஜங்சன் என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வரும் மதுரையை சேர்ந்த பிரபல யூடியூர் புகாரி பேஸ்புக்கில் உணர்ச்சிப்பூர்வமான ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில். "நான்கு மாதங்களுக்கு முன்பு நண்பர் காளீஸ்வரன் மூலம் ஒரு அழைப்பு வந்தது. "மாடியில விளையாடிட்டு இருந்த பொண்ணு மழை பெய்யுதுன்னு ஓடி வர, கீழ கிடந்த போர்வை கால்ல சுத்தி கீழ விழுந்து கால் உடைஞ்சிருச்சு. உங்களாலோ அல்லது Buhari junction channel மூலமாகவோ ஏதாவது பண்ண முடியுமான்னு".
அவ்வப்போது யாராவது சொல்வார்கள், நீங்கள் சந்திக்கிற நபர்களில் யாருக்காவது அவசரத் தேவைகள் இருந்தால் தயங்காமல் கேளுங்கள் என யாராவது சொல்வது உண்டு. அப்படி தெரிந்த நண்பர்களிடம் தகவலை சொல்லி கடைசியாக துபாயிலிருந்து நண்பர் நவாஸ் மூலம் சிறு தொகையை ஏற்பாடு செய்து முதல்கட்ட சிகிச்சைக்கு தயார்படுத்தினோம்.
வறுமையின் கோரப்பிடியில் இருந்த உமா மகேஸ்வரியின் குடும்பத்திற்கு படிப்பு மட்டும் தான் நம்பிக்கை. காலில் ப்ளேட், கைகளில் பிளேட் என எதிர்காலம் என்னவாகும் என தெரியால் சூழலில் "கண்டிப்பாக யார் துணையும் இல்லாமல் தேர்வெழுதுவேன் "என 12ம் வகுப்பு தேர்வை எழுதினார். உமா மகேஸ்வரி தற்போது பள்ளி அளவில் மூன்றாம் இடம் பிடித்திருப்பதாக மதிப்பெண் லிஸ்ட் அனுப்பிவைத்தனர்.

இன்னும் சிகிச்சை முழுமையாக முடியாத நிலையில் நீட்டுக்காக தயாராகிக்கொண்டு இருக்கிறார் உமா மகேஸ்வரி. நான்கு மாதங்களுக்கு பிறகு இந்த சம்பவத்தை பகிர்ந்ததற்கான காரணம் உமா மகேஸ்வரியின் நம்பிக்கையும்,கனவும் ஜெயித்திருப்பதன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள தானே தவிர வேறொன்றும் இல்லை. நன்றி காளீஸ்வரன், நவாஸ்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications