“லஞ்சம் கொடுத்து அரசு வழக்கறிஞர்களாக வருபவர்கள் சட்டத்தை பாதுகாப்பார்களா?” - ஐகோர்ட் கிளை காட்டம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: லஞ்சம் கொடுத்து அரசு வழக்கறிஞர்களாக வரவேண்டுமா? அப்படி வருபவர்கள் சட்டத்தைப் பாதுகாப்பார்களா? என அரசு வழக்கறிஞர் நியமன முறைகேடு குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக தவெக நிர்வாகி அனிஷ், பெண் வழக்கறிஞர் ஒருவரிடம் ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

government pleader

அரசு வழக்கறிஞர் நியமன முறைகேடு புகாரை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க உத்தரவிடக் கோரி கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜெகன்ராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சப் பணம் கைமாறியுள்ளதாகவும், தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டி, இந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரித் சபரி, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பணம் பெற்றதற்கான ஆடியோ ஆதாரங்கள் உள்ளன. எனவே லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.

அப்போது நீதிபதி, அரசு வழக்கறிஞர் பதவியை யார் விற்பனை செய்தது?அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு லஞ்சம் பெறப்பட்டது என்ற புகார் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் புகாரை ஏன் விசாரிக்கவில்லை. புகார் வந்தால் விசாரிக்க மாட்டீர்களா? லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். இரண்டு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றார்.

மேலும், "லஞ்சம் கொடுத்து வழக்கறிஞர்களாக வர வேண்டுமா?" என்றும் "இப்படி வரும் இவர்கள் நாட்டை காப்பாற்றுவார்களா? சட்டத்தைப் பாதுகாப்பார்களா?" என்றும் கடுமையான அதிருப்தி தெரிவித்துள்ளார் நீதிபதி.

சட்டத் துறையிடம் இருந்து உரிய பதில் கிடைத்தவுடன், அடுத்த 4 வாரங்களில் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தித் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+