ஹாட் பாக்ஸில் மணக்க மணக்க மட்டன் பிரியாணி.. திமுக மதுரை மாநாட்டில் இன்று வேற லெவல் ஏற்பாடு!
மதுரை: மதுரையில் இன்று நடைபெறும் திமுக தென் மண்டல வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கான மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் ஹாட் பாக்ஸில் மணக்க மணக்க மட்டன் பிரியாணி வழங்கப்படுகிறது. சிற்றுண்டி பையுடன் சேர்த்து ஹாட் பாக்ஸில் மட்டன் பிரியாணி வழங்கப்படுகிறது.
தென் மண்டல வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கான மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 20 திமுக மாவட்டங்கள் மற்றும் 58 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இந்த பயிற்சி மாநாடு மதுரை உத்தங்குடியில் அமைந்துள்ள 'கலைஞர் திடல்' வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், 1 லட்சத்து 90 ஆயிரம் வாக்குச்சாவடி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

திமுக கூட்டங்கள்
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. அந்த வகையில் திமுக கடந்த ஆண்டு ஜூன் மாதம் மதுரையில் பொதுக்குழு கூட்டம், அதைத் தொடர்ந்து உடன்பிறப்பே வா சந்திப்பு, கரூரில் திமுக முப்பெரும் விழா, திமுக இளைஞரணி சார்பில் திருவண்ணாமலையில் வடக்கு மண்டல மாநாடு, திருப்பூர் மற்றும் தஞ்சையில் மகளிர் அணி சார்பில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு என திமுக தொடர்ச்சியாக தீவிரம் காட்டி வருகிறது.
தேர்தலை எதிர்நோக்கி, திமுகவின் இளைஞர் அணி, மகளிர் அணி மாநாடுகள் அடுத்தடுத்து மண்டல வாரியாக நடைபெற்று வருகின்றன. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் அண்மையில் தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் 20 திமுக அமைப்பு மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மதுரையில் இன்று மாநாடு
அதன் தொடர்ச்சியாக, தென் மண்டல வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கான மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 20 கழக மாவட்டங்கள் மற்றும் 58 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இந்த பிரம்மாண்ட பயிற்சி மாநாடு, 21.02.2026 சனிக்கிழமை அன்று மதுரை உத்தங்குடியில் அமைந்துள்ள 'கலைஞர் திடல்' வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் சுமார் 1,90,000 வாக்குச்சாவடி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். திமுக வாக்குச்சாவடி நிர்வாகிகள் வருகை தரும் பேருந்துகள் மற்றும் வாகனங்களை நிறுத்த சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிட வசதி செய்யப்பட்டுள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் உணவு தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்நாக்ஸ் பை
இந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு பிஸ்கட், குடிநீர் பாட்டில், நொறுக்குத் தீனி, கடலை மிட்டாய், ஜூஸ் பாட்டில், திமுக கட்சித் துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பைகள், அவர்களது இருக்கைகளிலேயே முன்கூட்டியே வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுத் திடல் முழுவதும் கழக அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிப் பயணத்தை விளக்கும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பங்கேற்கும் அனைவருக்கும் அரசின் சாதனைப் பட்டியல் அடங்கிய சிறப்புப் புத்தகம் வழங்கப்படுகிறது.
ஹாட் பாக்ஸில் மட்டன் பிரியாணி
மேலும், அனைவருக்கும் மட்டன் பிரியாணி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்காக சுகாதாரமான முறையில் சுடச்சுட மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் கிரேவி தயார் செய்யப்பட்டு, அதனை தனித்தனியாக ஹாட் பாக்ஸில் வைத்து வழங்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக பிரியாணிகள் பொட்டலங்கள், அல்லது டப்பாக்களில் தான் கொடுக்கப்படும். இந்த முறை ஹாட் பாக்ஸ்களில் பிரியாணியை அடைத்து கொடுத்துள்ளனர். இந்த ஹாட்பாக்ஸ்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் நெருங்கும் சூழலில், மாநாட்டுக்கு வருபவர்களுக்கு ஹாட் பாக்ஸும் வழங்கப்படுகிறது.
-
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக்












Click it and Unblock the Notifications