மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வு மையம்... இந்தி, ஆங்கிலத்தில் வழிகாட்டு பதாகைகள்... தமிழ் புறக்கணிப்பு..?

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் உள்ள நீட் தேர்வு மையங்களில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டு பதாகைகளில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் தமிழில் வழிகாட்டுப் பதாகைகள் அமைக்கப்படாதது தமிழ் ஆர்வலர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

மத்திய அரசு இந்தியை திணிப்பதாக எதிராக ஏற்கனவே திமுக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

கொடுமையிலும் கொடுமை... பட்டினி வயிற்றில் நீட் பரீட்சை... மதிய உணவை மறந்த மாணவச் செல்வங்கள்..! கொடுமையிலும் கொடுமை... பட்டினி வயிற்றில் நீட் பரீட்சை... மதிய உணவை மறந்த மாணவச் செல்வங்கள்..!

நீட் மையங்கள்

நீட் மையங்கள்

நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதுவதால் 3,842 மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த மையங்களில் கொரோனா கால பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் தேர்வு நெறிமுறைகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும்படி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மதுரையில் உள்ள நீட் தேர்வு மையங்களில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டு பதாகைகளில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.

சங்கம் வைத்து

சங்கம் வைத்து

சங்கம் வைத்தும் தமிழ் வளர்த்த மண் மதுரை. இப்படி பல பெருமைகள் உடைய மதுரையில் தமிழ் மொழியில் வழிகாட்டுப் பதாகைகள் அமைக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு தேர்வு எழுத செல்பவர்களுக்கு ஆங்கிலம் புரியும் என்றாலும் கூட தமிழகத்தில் தமிழக மாணவர்கள் தேர்வு எழுதும் மையத்தில் இந்தி மொழிக்கு என்ன வேலை என்ற கேள்வி எழுகிறது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் நீட் தேர்வு மையத்தில் இந்தி மொழியில் வழிகாட்டுப் பதாகை நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் உள்ள நீட் தேர்வு மையத்தில் தமிழ் புறக்கணிப்பட்டது தமிழ் ஆர்வலர்களை வேதனை அடைய வைத்துள்ளது.

தமிழகம் முழுவதும்

தமிழகம் முழுவதும்

இதனிடையே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலை முதலே தமிழகம் தழுவிய அளவில் பல்வேறு அரசியல் இயக்கத்தினரும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடத்தி வருகின்றனர். தேர்வு மையங்களுக்கு முன்பு நீட் தேர்வுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்புவதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் நீட் தேர்வு மையங்கள் முன்பு பரபரப்பு நிலவி வருகிறது.

English summary
NEET Exam centres, Guideline Banners hindi and English only
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X