நியூஸ் மேக்கர் 2020 : மு.க. அழகிரி 70 - SUN னோட SON க்கே தடையா... ரஜினியுடன் நடிப்பேன்
2020ஆம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை 12 மாதமும் ஏதாவது ஒரு பேட்டியை தட்டி விட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர் மு.க. அழகிரி.
மதுரை: திமுகவைப் பொறுத்தவரை மு.க.அழகிரி பூமிக்குள் புதைத்து வைத்திருக்கும் கன்னிவெடி மாதிரி. யாராவது கிட்டே போய் தொட்டாலே போதும் வெடித்து சிதறிவிடுவார்கள் என்று தெரியும். திமுகவை விட்டு நீக்கப்பட்டு ஒதுங்கியிருக்கும் மு.க அழகிரி 2020ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் டிசம்பர் வரைக்கும் ஏதாவது ஒரு செய்தியில் அடிபட்டுக்கொண்டே இருக்கிறார். 70வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடியது முதல் 2021 சட்டசபைத் தேர்தலில் தன்னுடைய பங்களிப்பு இருக்கும் என்று கூறிவிட்டு ரஜினி படத்தில் கூட நடிப்பேன் என்று சொன்னது வரைக்கும் செய்தியில் அடிபட்டது.
2020ஆம் ஆண்டில் பல சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பரபரப்பில் இப்போதே அரசியல் கட்சிகள் இறங்கி விட்டன. பிரதான எதிர்கட்சியான கட்சியான திமுக ஆட்சியை கைப்பற்ற முழு வீச்சில் இறங்கியுள்ளது.
திமுகவின் வேகத்திற்கு மிகப்பெரிய தடையே மு.க.அழகிரிதான். கடந்த 2011, 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக தென்மாவட்டங்களில் தோல்வியடைய காரணமாக அமைந்தவர் மு.க.அழகிரி என்பது எல்லோருக்குமே தெரியும். 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்று கூறியுள்ளார் மு.க அழகிரி. அப்படி என்னதான் செய்யப் போகிறார் அழகிரி என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களுக்கு மட்டுமல்ல திமுகவினருக்குமே இருக்கத்தான் செய்கிறது. 2020ஆம் ஆண்டில் அழகிரி ஏற்படுத்திய பரபரப்புகளை பார்க்கலாம்.

களையிழந்த 70வது பிறந்தநாள்
ஜனவரி 30 ஆம் தேதி மு.க அழகிரி பிறந்தநாள். 15 நாட்களுக்கு முன்பு இருந்தே அவருடைய ஆதரவாளர்கள் தயாராகிவிடுவார்கள். தை பொங்கல் திருநாளில் இருந்தே முளைப்பாரி போட, கரகாட்டம், ஒயிலாட்டம் என கலைஞர்களை புக் செய்து விட்டு காத்திருப்பார்கள். மிகப்பெரிய மண்டபத்தில் பிரியாணி விருந்தோடு தயாராகி விடும் நலத்திட்ட உதவிகளும் களைகட்டும். எல்லாமே இவர் திமுகவில் தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும் அமைச்சராக இருந்த வரைக்கும்தான். 70வது பிறந்தநாளை இந்த ஆண்டு எளிமையாக கொண்டாடினார்.

கறி விருந்து இல்லையே
திமுகவில் ஓஹோவென இருந்த போது மு.க.அழகிரியின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் கறி விருந்துடன் குறைந்தது மூன்று நாட்களுக்காவது திருவிழாவை போல் மதுரையில் நடத்துவார்கள். திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்ட பின்னர் கேக் வெட்டுவதோடு கொண்டாட்டங்களை நிறுத்திக்கொண்டனர்.

களைகட்டிய போஸ்டர்கள்
மனவேதனையில் இருந்த அழகிரியும் பிறந்தநாளன்று தன்னை யாரும் வந்து பார்க்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
கடந்த ஜனவரி 30ஆம் தேதி அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு SUN னோட SON க்கே தடையா என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டினார்கள் அழகிரியின் ஆதரவாளர்கள். ஒற்றுமையாய் இருந்து ஒன்றாய் பயணிப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

எல்லாம் எமக்கும் தெரியும்
தனது 70வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அழகிரி தன்னை பற்றி எல்லோருக்கும் தெரியும் என்றும், இந்த நிலை எப்போது மாறும் எனவும் தமக்கு தெரியும் எனவும் பொடி வைத்துப் பேசினார். அப்போதே பரபரப்பை பற்றிக்கொண்டது.

தனி கட்சியா
கடந்த சில மாதமாகவே அழகிரி குறித்து பல்வேறு ஊகங்கள் பரவி வந்தன. அவர் பாஜகவில் இணையப் போவதாக, ரஜினியுடன் சேரப் போவதாக என பல ஊகங்கள் பரவின. இவற்றை எல்லாம் முக அழகிரி திட்டவட்டமாக மறுத்தார். பாஜகவில் சேரப்போவதாக வெளியான தகவல் வதந்தி என்று கூறினார். அதே நேரத்தில் தனி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மட்டும் இதுவரை எந்த மறுப்பும் அவர் கூறவில்லை.

எல்லாம் வதந்திதான்
கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் திமுகவில் இணைய அழகிரி தரப்பில் மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளும் பலனளிக்காமல் போன நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். அண்மையில் அமித் ஷா வருகையை ஒட்டி அழகிரியின் அரசியல் பிரவேசப் பேச்சு மீண்டும் சலசலக்கப்பட்டது. தயாநிதிக்கு திமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு, வதந்திகளுக்கு எதுவும் பதில் கூற முடியாது. அமித்ஷாவை நான் சந்திக்க போவதாக கூறிய வதந்தி போல தான் இந்த செய்தியும் என்று கூறினார்.

ஆலோசனைக்குப் பின் முடிவு
2021 சட்டசபைத் தேர்தலில் எனது பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் . கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் ஆலோசித்து புதிய கட்சி தொடங்குவது குறித்து எனது முடிவை அறிவிப்பேன் என்றார். தொடர்ந்து அவரே, சட்டசபை தேர்தலில் உங்கள் பங்களிப்பு இருக்குமா? என்று கேட்டனர். அதற்கு மு.க.அழகிரி:வாக்களிப்பதுதான் என் பங்களிப்பு என்று கூறினார். மேலும் கட்சி ஆரம்பிப்பது, கூட்டணி அமைப்பது, வாக்களிப்பது கூட தேர்தல் பங்களிப்புதான் என்றும் கூறி குழப்பினார்.

ரஜினியுடன் நடிப்பேன்
ரஜினியுடன் இணையப்போகிறார் அழகிரி என்று தகவல் வெளியான நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக அழகிரியே அதற்கு விளக்கம் அளித்தார். ரஜினியுடன் இணைய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு வாய்ப்பு கொடுத்தால் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கலாம். அவர் புதிய படத்தில் நடிக்க அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். கட்சி தொடங்க இருக்கும் ரஜினிக்கு ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்து விட்டேன் என்று தெரிவித்தார். ரஜினிகாந்த் 70வது பிறந்நாளை கொண்டாடியுள்ளார் மு.க அழகிரிக்கும் 70வது வயது நடைபெறுகிறது. இருவரும் அரசியலில் ஒன்றிணைய வாய்ப்பு உள்ளதா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்து விடும்.

தடைக்கல்லா படிக்கல்லா
திமுகவின் வெற்றி இலக்கான மிசன் 200 பற்றி அழகிரிக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். தென் மாவட்டங்களில் அழகிரிக்கு என்று உள்ள செல்வாக்கு இன்னமும் இருக்கிறதா என்பது இந்த சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் தெரிந்து விடும். திமுகவின் வெற்றிக்கு மு.க. அழகிரி தடைக்கல்லாக இருப்பாரா? அல்லது படிக்கல்லாக மாறுவாரா பார்க்கலாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications