துணை ஜனாதிபதி வந்தப்போ.. ஜெனரேட்டரை ஆஃப் பண்ணிட்டாங்க! HRCE மீது பழி போடும் சிடிஆர் நிர்மல்குமார்
மதுரை: மீனாட்சியம்மன் கோவிலில் துணை குடியரசு தலைவர் வருகைக்காக பராமரிப்பு பணிகளுக்காக ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம் கொடுக்கப்பட்டது. துணை குடியரசு தலைவர் வெளியில் சென்றுவிட்டார் என கூறி ஜெனரேட்டர் ஸ்விட்ச் ஆப் செய்துள்ளனர் என கூறியுள்ளார் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார். மேலும், தவெக ஆட்சியில் மின் தடை என நரேட்டிவ் செட் செய்கின்றனர் திமுகவினர் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை தங்கராஜ் சாலையில் உள்ள வணிக வரித்துறை இணை ஆணையர் அலுவலக வளாகத்தில் புதுப்பிக்கப்பட்டு கூடுதலாக முதல் தளம் கட்டப்பட்டுள்ள வணிகவரித்துறை பணியாளர் பயிற்சி நிறுவனக் கட்டடத்தை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," மீனாட்சியம்மன் கோவிலில் துணை குடியரசு தலைவர் வருகைக்காக பராமரிப்பு பணிகளுக்காக ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம் கொடுக்கப்பட்டது.
துணை குடியரசு தலைவர் வெளியில் சென்றுவிட்டனர் என கூறி ஜெனரேட்டர் ஸ்விட்ச் ஆப் செய்துள்ளனர்.
அதனால் மின் தடை ஏற்பட்டது. அது தொடர்பாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளோம். ஸ்டாலினுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அனைவருக்கும் ஒரே மாதிரியான பாதுகாப்பு தான் வழங்கப்பட்டுள்ளது.
மின்சாரம் வழங்குவதில் எங்கெங்கு பிரச்சனைகள் உள்ளதோ அதனை சரி செய்கிறோம். என்னுடையை துறை தினசரி ஆப்ரேசன் செய்கிறது துறை என்பதால் அதீதி சவால்மிக்க துறை. சிறைத்துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளளோம். 16 சப் ஜெயில்களில் பணியிடங்களை நிரப்பவுள்ளோம்.
கடந்த ஆட்சியில் மின்னகம் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என தெரியும். எங்கெங்கு ஊழல் நடந்துள்ளதோ அதனை நிறுத்தியுள்ளோம். எங்கெங்கு தவறு இருக்கிறதோ அதனை சரி செய்து வருகிறோம். எங்கெங்கு மின்வெட்டு வருகிறதோ அதனை சரி செய்கிறோம். மீடியா வழியாக மின்தடை என நரேடிவ் செட் செய்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications
