நீங்க அம்மா கட்சியா? பிடிஆரிடம் வந்து விழுந்த கேள்வி.. ஜெர்க் ஆக வைத்த வட இந்திய பெண்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை ரயில் விபத்து தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் ஒருவர் பிடிஆரிடம் நீங்கள் எந்த கட்சி என்று கேட்பார். அதற்கு பிடிஆர் திமுக என்பார். அப்போது ஒரு பெண் அம்மா ஜெயலலிதா கட்சியா என்று இந்தியில் கேட்பார். பிடிஆர் வீடியோவை மிகவும் உன்னிப்பாக கவனித்தால் தெரியும்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சுமார் 63 பேர் கொண்ட குழுவினர் கடந்த 17ஆம் தேதி புறப்பட்டு ஆன்மீக சுற்றுலாவாக தமிழகம் வந்தனர். அவர்கள் வந்த ரயில் பெட்டிகள் மதுரை ரயில் நிலையத்திற்கு சற்று தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

North indian woman asks PTR in madurai train video : are you Amma Jayalalitha party?

அப்போது அந்த ரயில் பெட்டியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் 6 ஆண்கள், 3 பெண்கள் என 9 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர் இந்த விபத்திற்கு காரணம் ரயில் பெட்டியில் சிலிண்டரை பயன்படுத்தி டீ போட முயன்றதுதான் காரணம் என்றும், கொள்ளைக்காரர்கள் யாராவது உள்ளே வந்துவிடுவார்களோ என்ற பயத்தில் பெட்டியை பூட்டி வைத்தது தான் உயிரிழப்பும், காயமும் அதிகரிக்க காரணம் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் அயோத்தி பட பாணியில் வேண்டிய அனைத்து உதவிகளையும் நெகிழ்ச்சியோடு மதுரை மக்கள் செய்தனர். பலரையும் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். சொந்த ஊருக்கு உடல்களை அனுப்பவும், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தமிழக அரசு சார்பில் ஏற்பாடும் செய்யப்பட்டது. மத்திய அரசு சார்பில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சமும், தமிழக அரசு சார்பில் 3 லட்சமும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரயில் விபத்து குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேரடியாக சென்று பார்வையிட்டு வீடியா ஒன்றையும் வெளியிட்டார். அந்த வீடியோ பலரையும் நெகிழ வைத்துள்ர.

இதுகுறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், குழந்தை தன்னுடன் பேசியது குறித்து கூறுகையில், மாமா உங்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என தீவிபத்துக்குள்ளாகிய சுற்றுலா வந்திருந்த சிறுவன் தெரிவித்திருந்தான். ஒரு முதியவர் கூறுகையில் எரிந்து கொண்டிருந்த நெருப்பிலிருந்து இறைவன் எங்களை காப்பாற்றினார். அதன் பிறகு நீங்கள் அனைவரும் எங்களை மிக நன்றாக கவனித்துக் கொண்டீர்கள். உங்கள் மீது நாங்கள் அதீத நன்றி உணர்வுடன் உள்ளோம். எங்கள் மாநிலத்திற்கும் உங்களை போன்று எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் கிடைப்பார்கள் என்று என்னிடம் தெரிவித்தார்கள் என பிடிஆர் கூறினார்.

இதனிடையே பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வீடியோவை கவனித்தால் அதில் சில விஷயங்கள் உங்களுக்கு தெரியும். அதில் ஒருவர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை பார்த்து நீங்கள் எந்த கட்சி என்று கேட்பார். அதற்கு பிடிஆர் திமுக என்பார். அப்போது அங்கிருந்த பெண்மணி அம்மா ஜெயலலிதா கட்சியா என கேட்பார். அதற்கு இல்லை என்பார்.

இந்த வீடியோவை பார்த்தால் ஒரு விஷயம்தெளிவாக புரியும். திமுகவை இன்னும் வட இந்தியாவிலுள்ள பெண்களுக்கு அவ்வளவாக தெரியவில்லை. அதேநேரம் வட இந்தியாவில் ஜெயலலிதா பிராண்ட்டாக மாறியுள்ளார். அதுவும் அம்மா என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறார். இதுதான் சினிமாவின் பவர் .சினிமாவில் திரைப்படங்களில் நடித்து, பின்னர் அரசியலுக்கு வந்ததால் வட இந்தியாவில ஜெயலலிதாவை மக்கள் நன்றாக அறிந்து வைத்து இருக்கிறார்கள் என்பது இந்த வீடியோவை பார்த்தால் தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+