மதுரையில் நடக்கவிருந்த ஓபிஎஸ் மாநாடு ஒத்திவைப்பு.. மாற்றுத் திட்டம் என்ன? இதுதான் காரணமா!

Subscribe to Oneindia Tamil

மதுரை: செப்டம்பர் 4ல் மதுரையில் நடக்கவிருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளிவந்த போது ஓபிஎஸ் தரப்பு மதுரையில் மாநாடு நடத்தும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

அண்மையில் பிரதமர் மோடி தமிழ்நாடு வந்த போது, அவரை வரவேற்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கோரி இருந்தார். இதற்காக கடிதம் அனுப்பிய போதும், அனுமதி கிடைக்கவில்லை. அதேபோல் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை தொடர்பு கொண்ட போதும், ஓபிஎஸ் அழைப்புக்கு செவி சாய்க்கப்படவில்லை. இதனால் ஓபிஎஸ் தரப்பு அதிருப்தியில் இருந்தது.

OPS Conference

இதன்பின் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறுவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான பின், முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார். இதனிடையே ஓபிஎஸ் தரப்பு செப்.4ல் மதுரையில் மாநாடு நடத்த இருப்பதாக அறிவித்தது.

ஆனால் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியதால், மாநாடு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 4ல் மதுரையில் நடக்கவிருந்த மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதமே மாநாட்டுப் பணிகள் தொடங்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் மாநாட்டுப் பணிகள் எதுவும் நடக்கவில்லை.

அதற்கு பதிலாக ஓபிஎஸ் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேனி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, பரமக்குடி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆலோசனை நடத்தி இருக்கிறார். தேவர் ஜெயந்தி நெருங்கி இருக்கும் சூழலில், ஓபிஎஸ் அடுத்த சில வாரங்களில் அரசியல் பணிகளை தீவிரப்படுத்துவார்.

அதேபோல் ஓபிஎஸ் தரப்பில் அதிமுகவுக்காக வாக்கு சேகரிப்பேன் என்று கூறி இருக்கும் சூழலில், மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் பாஜக - அதிமுக கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகளை கணக்கில் கொண்டு மாநாடு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+