மாண்புமிகு அம்மா.. நிமிடத்திற்கு ஒருமுறை உச்சரித்த ஒபிஎஸ்.. அமமுகவின் பெயர் சொல்ல மறுப்பு
மதுரை: மாண்புமிகு அம்மா.. நிமிடத்திற்கு ஒருமுறை உச்சரித்த இன்று வரை பிரச்சாரம் செய்து வரும் துணை முதல்வர் ஒபிஎஸ், தினகரனின் அமமுகவின் பெயரை சொல்லி அழைக்க விருப்பமில்லை என மறுத்துவிட்டார்.
திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வில்லாபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2011ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற ஆறு மாதத்தில் மின்வெட்டு இல்லாமல் மாற்றி காட்டினார். காவிரி இறுதி தீர்ப்புக்கு அரசாணையை பெற்றுத்தந்தவரும் ஜெயலலிதா தான். அதிமுக அரசுக்கு எதிராக திமுகவும், அமமுகவும் தவறான பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. ஸ்டாலின் என்னென்னமோ வழிகளில் தவறான பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் ஒன்றும் எடுபடவில்லை.
திமுகவின் ஸ்டாலின் 22 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்கிறார். மற்றொரு கட்சியின்(அமமுக) கொள்ளை பரப்பு செயலாளர், நாங்கள் 22 தொகுதிகளிலும் வெல்வோம் என்கிறார். வென்று திமுகவுடன் இணைந்து ஆட்சியை கவிழ்ப்போம் என்கிறார். உண்டு கொழுத்தவர்கள், எப்படி இப்படி ஒரு துரோகம் செய்கிறார்கள்.
அதிமுகவிற்கு துரோகம் செய்து கட்சியை ஆரம்பித்தவர்கள் இதுவரை உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. 32 ஆண்டுகள் அம்மாவுடன் இருந்தவர்கள், கட்சியிலும், ஆட்சியை அழிக்க நினைத்தால் அதனை ஒன்றரை கோடி தொண்டர்களும் தடுத்து நிறுத்துவார்கள்" இவ்வாறு கூறினார்.
முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை பட்டியிலிட்டு பேசிய ஒ பன்னீர்செல்வம், ஒவ்வொரு முறையும் மாண்புமிகு அம்மா என ஒவ்வொரு வாக்கியம் ஆரம்பிக்கும் போதும் குறிப்பிட்டு பேசினார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications