ஜெ.வின் உண்மை விசுவாசி இபிஎஸ்.. ஜானகிபோல் ஒபிஎஸ் விட்டுக்கொடுக்கனும் -அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா
மதுரை: 4 ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்தவருக்கு தலைமையை விட்டு கொடுக்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "தற்போதைய விதியின் காரணமாகவே அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.
விதியை மாற்றினால்தான் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் என கட்சித் தொண்டர்கள் நம்புகிறார்கள். நல்ல தலைமை வர வேண்டும் என அனைவரும் எதிர்பார்கிறார்கள். நாங்கள் அதனை நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற விவாதம் தற்போது எழுந்து இருக்கிறது. பொதுக்குழுவில் அதுகுறித்து முடிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
சட்டத்தில் மாற்றம் செய்யவதில் தவறேதும் இல்லை. சட்டத்திருத்தம் செய்வது புதிதான ஒன்றல்ல. மாவட்டச் செயலாளர்களில் 90% பேர் ஒற்றை தலைமை வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அதிமுகவுக்கு நல்ல தலைமையை அமைக்கக் கூடிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது. அதிமுக கிளைக் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றப் உள்ளோம். அவர்களின் நல்ல கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.
நான் கடந்த 2019-ம் ஆண்டே அதிமுகவின் ஒற்றை தலைமை வேண்டும் என கூறினேன். தற்போது பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட இருக்கும் முடிவை ஏற்று நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் சரி. ஓ.பன்னீர்செல்வத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிகாரபூர்வமானது அல்ல. அதுகுறித்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை.
எம்ஜிஆர் மனைவி ஜானகி பெருந்தன்மையாக விட்டு கொடுத்தை போன்று விட்டு கொடுத்தால் அதிமுக சிறக்கும். எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதா தனிக் கட்சியை தொடங்கியபோது சேவல் சின்னத்தில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்டவர். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி எடப்பாடி பழனிச்சாமி. 4 ஆண்டுகள் ஆட்சியை சிறப்பாக நடத்தி அதிமுகவை காப்பாற்றியவருக்கு தலைமையை விட்டுத்தர வேண்டும்." என்றார்.
-
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications