டிடிவி தினகரன் உட்பட யாரும் என்டிஏ கூட்டணிக்கு என்னை அழைக்கவில்லை.. ஓபிஎஸ் ஒரே போடு!
மதுரை: என்டிஏ கூட்டணியில் சேர டிடிவி தினகரன் உட்பட யாரும் என்னை அழைக்கவில்லை என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக ஒன்றிணைவது ஆண்டவன் கையில் மட்டுமே உள்ளது என்று கூறிய ஓபிஎஸ், கூட்டணி தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் உரிய நேரத்தில் உரிய பதில் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக இணைந்துவிட்டது. என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்த நாளில் இருந்து ஓபிஎஸ் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஓபிஎஸ் தரப்பை சேர்க்க முடியாது என்பதில் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருக்கிறார். என்னதான் டிடிவி தினகரனுடன் நெருக்கம் காட்டினாலும், அவர் மற்றொரு கட்சியை நடத்தி வருகிறார்.

ஆனால் ஓபிஎஸ் இன்னும் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறார். இதன் காரணமாகவே ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களில் சிலரை அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி தயக்கம் காட்டுகிறார். ஆனால் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூக வாக்குகளை முழுமையாக அறுவடை செய்ய ஓபிஎஸ் அவசியம் என்ற நிலை உள்ளது.
குறிப்பாக பாஜகவுக்கு ஓபிஎஸ் தேவை அதிகமாகவே இருக்கிறது. ஏற்கனவே முத்தரையர் சமூக வாக்குகளை திமுக முழுமையாக அறுவடை செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் திமுகவை வீழ்த்துவது கடினமக இருக்கும். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க ஓபிஎஸ் ஒப்புக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் பேசுகையில், பிரிந்துள்ள அதிமுகவின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் ஒன்றைய தலையாய கோரிக்கையாக இருக்கிறது. வேறு எந்த கோரிக்கையும் எங்களிடம் கிடையாது என்று தெரிவித்தார். தொடர்ந்து, மீண்டும் அதிமுக ஒன்றிணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, எல்லாம் ஆண்டவன் கையில் உள்ளது என்றார்.
தொடர்ந்து டிடிவி தினகரன் உள்ளிட்டோர் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, என்டிஏ கூட்டணியில் சேர டிடிவி தினகரன் உட்பட யாரும் என்னை அழைக்கவில்லை. கூட்டணி தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் உரிய நேரத்தில் உரிய பதில் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனால் ஓபிஎஸ் தரப்பு என்டிஏ கூட்டணியில் இணையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல் ஓபிஎஸ் தரப்பை தங்கள் கூட்டணியில் கொண்டு வர விஜய் தரப்பு முயற்சித்து வருகின்றது. செங்கோட்டையன் மூலமாக ஓபிஎஸ் மற்றும் ராமதாஸ் ஆகிய இரு தரப்புடனும் தவெக பேசி வருவதாக கூறப்படுகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications