தனி மரமாகும் ஓ.பன்னீர்செல்வம்.. பறிபோகும் அடுத்த விக்கெட்.. டிடிவி தினகரன் ஸ்கெட்ச்
மதுரை: தமிழ்நாடு அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகிவிட்டது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டது. வருகின்ற நாட்களில் கூட்டணி முழுமையாக இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய பிறகு அடுத்த முடிவை எடுக்காமல் இருப்பது அவரின் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் அவரிடம் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், தற்போதுள்ள சிட்டிங் எம்எல்ஏ அய்யப்பன் டிடிவி தினகரனை சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களம் காண்பதால் இந்தமுறை 4 முனை போட்டி நிலவி வருகிறது. களம் இப்போதே பரபரக்க தொடங்கிவிட்டது.

கூட்டணி உடன்பாடு
பிரச்சாரம், தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள் ஆகியவற்றால் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ, மநீம உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. தவெக விஜய் கூட்டணி என்று அறிவித்தாலும் அவர்களுடன் எந்தக் கட்சியும் கூட்டணி சேரவில்லை.
தேமுதிக, ராமதாஸ் பாமக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், புதிய தமிழகம் கட்சி தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அவர்களுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. ஆனால் தங்களுடன் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தேமுதிக மற்றும் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளனர்.
தனி மரமாகும் ஓ. பன்னீர்செல்வம்
கடந்த முறை அவர்கள் அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்த காரணத்தால் இந்த முறையும் அந்தக் கூட்டணியில் இணைவதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ்ஸை தங்கள் பக்கம் இழுக்க திமுக, பாஜக, தவெக ஆகிய 3 கட்சிகளும் முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவரிடம் இருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் திமுகவிலும், எம்பி தர்மர் அதிமுகவிலும், கு.ப. கிருஷ்ணன் தவெகவிலும் இணைந்துள்ளனர். இதனால் விரைவில் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஓபிஎஸ் இருக்கிறார். இந்நிலையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
டிடிவி தினகரனுடன் சந்திப்பு
பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளரும், சிட்டிங் எம்எல்ஏவுமான அய்யப்பன் மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து டி.டி.வி தினகரன், "அய்யப்பன் என் நீண்ட கால நண்பர். இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. அவர் என்னை மீண்டும் சந்திப்பதாக கூறியுள்ளார். பன்னீர்செல்வம் திமுகவுக்கு செல்ல வாய்ப்பில்லை" என்றார்.
-
இரட்டை இலை வேண்டாம்.. குக்கர் சின்னமே போதும்.. அமித்ஷாவிடம் சொல்லிவிட்ட டிடிவி தினகரன்! -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
ஓ.பன்னீர்செல்வத்திடம் ஏடாகூட கேள்வி.. சட்டென டென்ஷனான பெரியகருப்பன் -
என்டிஏவில் அமமுவுக்கு எத்தனை தொகுதிகள்? டெல்லியில் பேசியது என்ன? ஓபனாக சொன்ன டிடிவி தினகரன் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்












Click it and Unblock the Notifications