"அண்ணே பாடை கட்டி தயாரா இருக்கேன் வாங்க!.." ஆர்.பி. உதயகுமாரை மிரட்டியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கைது
மதுரை: ஆர்.பி. உதயகுமாருக்கு போனில் மிரட்டல் விடுத்ததாக ஓபிஎஸ் ஆதரவாளர் சரவண பாண்டியன் கைது செய்யப்பட்டார்.
அதிமுகவில் தலைமைப் பொறுப்பை கைப்பற்றுவது யார் என ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல்கள் வெடித்து வருகின்றன. பொதுக் குழு தொடர்பாக இபிஎஸ் மேல்முறையீட்டு மனுவின் தீ்ப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பினர் வார்த்தை போர்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இரு தரப்பினரும் மாறி மாறி கட்சிக்கு துரோகி, விசுவாசமற்றவர் என்றெல்லாம் விமர்சித்துக் கொள்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்து வரும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக��மார் கடந்த சில தினங்களாக ஓபிஎஸ்ஸையும் அவரது ஆதரவாளர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இவருக்கு பேச்சுக்கு ஓபிஎஸ் தரப்பு பதிலடி கொடுப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

எதிர்க்கட்சித் துணை தலைவர்
ஓபிஎஸ் வகித்து வந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை உதயகுமாருக்கு கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால் உதயகுமார் எடப்பாடியின் அதி தீவிர விசுவாசியானார். ஒரு க���்டத்தில் ஓபிஎஸ் தலைமை பதவி ஏற்றால் தற்கொலை செய்து கொள்வேன் என ஆர்.பி. உதயகுமார் பேசியிருந்தார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்
இந்த நிலையில் ஆர்.பி.உதயகுமாரை தொடர்பு கொண்ட ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் வரம்பு மீறி பேசியதாக தெரிகிறது. செல்போனில் உதயகுமாரை தொடர்பு கொண்ட அந்த நபர், புலித்தேவன் பிறந்தநாள் விழாவுக்காக தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவ்வலுக்கு எப்போது வருவீர்கள்.

தற��கொலை செய்வதாக கூறிய மாஜி
ஓபிஎஸ் தலைமையேற்றால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளீர்கள். எங்கள் ஊருக்கு வரும் உங்களுக்கு பாடை தயாராக இருக்கிறது என அந்த நபர் கூறியிருந்தார். இது தொடர்பாக புகாரின் பேரில் தென்காசி மாவட்ட அதிமுக நிர்வாகியும் ஓபிஎஸ் ஆதரவாளருமான சரவண பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளர் கைது
இவர் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் என தெரிகிறது. இந்த உரையாடல் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. எடப்பாடி பழனிசாமி பக்கம் குண்டர்களும் ரவுடிகளும் இருப்பதாக ஓபிஎஸ் சொல்லிய நிலையில் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் பேசியுள்ளதை இபிஎஸ் தரப்பினர் விமர்சித்து வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications