மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகவோடு சேர்ந்து அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ்தான் அழியப் போகிறார்.. தங்க தமிழ்ச்செல்வன்

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ்தான் அழியப் போகிறார்.. தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி -வீடியோ

    மதுரை: நாங்கள் ஏன் திமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும். உண்மையில் திமுகவுடன் கூட்டணி வைத்து அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ்தான் அழியப் போகிறார் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

    தேனி தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழச்செல்வன் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    OPS will see his end in political career in this election, says Thanga Tamilselvan

    22 தொகுதியிலும் அமமுக தான் வெற்றிபெறும். டிடிவி தினகரன் தலைமையில் நல்லாட்சி அமைவதற்காக இந்த ஆட்சியை கலைக்கிறோம். இது துரோகிகளின் கூட்டணி ஆட்சி. கட்டுங்கடாக ஊழல் ஆட்சியாக உள்ளது.

    டிடிவி தினகரன் தலைமையில்தான் ஆட்சி அமைய வேண்டும்... தங்க தமிழ்ச்செல்வன் உறுதி! டிடிவி தினகரன் தலைமையில்தான் ஆட்சி அமைய வேண்டும்... தங்க தமிழ்ச்செல்வன் உறுதி!

    ஊழலை மையமாக கொண்டு இந்த ஆட்சி நடைபெறுகிறது. திமுகவோடு நாங்கள் எதற்குக் கூட்டணி வைக்க வேண்டும். ஜெ ஆட்சியை கலைக்க பேரவையில் திமுகவோடு ஆதரவு அளித்து கூட்டணி வைத்த ஓபிஎஸ் தான் அழியபோவது உறுதி.

    பொதுமக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளார்கள் என்பது வரும் 23ஆம் தேதி தெரியவரும். வரும்23ஆம் தேதி தோல்வியோடு அமைச்சர்கள் காணாமல் போவார்கள். பாஜகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஓபிஎஸ் - ஈபிஎஸ்சுக்குமான மோதல் இருந்துவருகிறது.

    கல்வித்துறையில் தமிழ்மொழி, ஆங்கிலத்தில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கலாம் என நடைமுறை கொண்டு வரக் கூடாது. தேர்தல் ஆணையம் என்பது இருப்பது போலவே தெரியவில்லை. அப்பட்டமாக ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது.

    அதிமுகவினர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பிரச்சனை உருவாக்க முயல்வதால் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியை தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் குண்டர்களை அனுமதிக்க வாய்ப்பு உள்ளது.

    தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையிலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. தேனி தொகுதியில் மறுவாக்குபதிவுக்கு யாரும் கேட்கவில்லை ஆனால் மறுவாக்குபதிவு நடக்கும்போது தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஓபிஎஸ் மகனின் வேட்புமனுவில் பிரச்சனை இருப்பதாக ஏற்கனவே புகார் அளித்துள்ளோம் என்றார்.

    English summary
    Thanga Tamilselvan has said that OPS will see his end in political career in this election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X