என்னது #GoBackToModi-யா? என்ன சீனிவாசன் இப்படி பண்ணிட்டீங்களே.. ஷாக் ஆன பாஜக..! எடிட் ஆப்ஷன் நல்லது!
மதுரை: பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்கு பதில் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரான ராம சீனிவாசன் எக்ஸ் தளத்தில் போட்ட பதிவு பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எக்ஸில் எடிட் ஆப்ஷன் இருந்ததால் தப்பித்தோம் என தனக்கு நெருக்கமான பாஜகவினரிடம் சொல்லி இருக்கிறார் ராம சீனிவாசன்.
தமிழக பாஜக தலைவர்களில் நன்கு அறிந்த முகமாக இருப்பவர் ராம.சீனிவாசன் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பது யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பது என பிசியாக இருந்தவர்.

நீண்ட காலமாக பாஜகவில் பயணிக்கும் அவர் நபார்டு வங்கியின் தனி இயக்குனராகவும் இருந்து வருகிறார்.
ராம.சீனிவாசன்: இந்த நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக இருந்தது. கட்சிக்குள்ளேயே பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர் போட்டியிட வாய்ப்பு குறைவு தான் என பேசப்பட்டது. இந்த நிலையில் யூகங்களை தவிடு பொடியாக்கி தற்போது மதுரை நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார் ராம சீனிவாசன்.
மதுரையில் போட்டி: முதலில் திருச்சியில் போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட நிலையில் தனது சொந்த ஊரான மதுரையிலேயே களமிறங்கி இருக்கிறார். அதற்கு பாஜகவில் இருக்கும் முக்கிய நபர் ஒருவரின் எதிர்ப்புதான் காரணம் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் ராம சீனிவாசனின் பெயர் இடம் பெற்றதோடு அவர் மதுரை தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் ராம.சீனிவாசன்.

எக்ஸ் பதிவு: ராம சீனிவாசனுக்கு ஆதரவாக கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பிரச்சாரம் மேற்கொண்டனர். குறிப்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையில் ரோட் ஷோ நடத்தி ராம சீனிவாசனுக்கு வாக்கு சேகரித்தார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்று மாலையுடன் கெடு நிறைவடையும் நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சாரத்தை மேற்கொள்ள பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் தங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் என்னென்ன திட்டங்களை கொண்டு வருவோம் என பேஸ்புக் எக்ஸ் வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.
’கோ பேக் டூ மோடி’ : இந்த நிலையில் ராம சீனிவாசனின் எக்ஸ் பதிவு தான் பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் உடனடியாக அந்தப் பதிவினை மாற்றி இருக்கிறார். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்க இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை தான் வரவேற்ற புகைப்படத்தை பகிர்ந்த ராம சீனிவாசன் ’கோ பேக் டூ மோடி’ என பதிவிட்டார். காலை 11.45 மணி அளவில் ராம.சீனிவாசன் இந்த பதிவை வெளியிட்டிருந்த நிலையில் பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

திடீர் திருத்தம்: ஆனாலும் சுமார் 40 நிமிடங்கள் அந்த பதிவு நீக்கப்படாமலும் திருத்தப்படாமலும் இருந்ததை தொடர்ந்து தொலைபேசி மூலம் ராம சீனிவாசனை தொடர்பு கொண்டு சிலர் இதுகுறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து 12.20 மணி அளவில் தனது எக்ஸ் பதிவை மாற்றி இருக்கிறார் ராம சீனிவாசன். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தான் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரும்பொதெல்லாம் ’கோ பேக் மோடி’ என பதிவிடுவது வழக்கம். இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் ராம சீனிவாசன் கோ பேக் டு மோடி என பதிவிட்டு இருப்பதை எதிர்க்கட்சிகளும் பகிர்ந்து பாஜக வேட்பாளரே மோடியை வெளியே போ என சொல்லிவிட்டார் என பரப்பி வருகின்றனர். ஆனால் ’கோ பேக் டூ மோடி’ என்பதற்கு மீண்டும் மோடியிடம் செல்வோம் என்பது தான் பதில் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.
-
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி












Click it and Unblock the Notifications