‘மேதகு’ தேசிய தலைவர் உயிரோடு உள்ளார்..உரிய நேரத்தில் ”மீண்டு”ம் வந்து போராடுவார்! பழ.நெடுமாறன் உறுதி
மதுரை: 'மேதகு' தேசிய தலைவர் உயிரோடு தான் இருக்கின்றார் எனவும் உரிய நேரத்தில் வெளியே வந்து போராட்டத்தை தொடங்குவார் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். மேலும், அவர் உயிருடன் இருக்கிறார் என்பதில் உறுதியாக உள்ளதாகவும், இதில் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை எனவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி காவலர் இயக்கம் சார்பில் மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள கூட்ட அரங்கில் தமிழகத் திருக்கோயிலில் வழிபாடுதல்களும் குடமுழுக்கு திருப்பணிகளும் தமிழ் மொழியில் நடத்திட சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்," மீனாட்சி அம்மன் கோவிலில் அடுத்த மாதம் குடமுழுக்கு நடைபெற உள்ளது. குடமுழுக்கு தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கப்பட்டது.
பழ நெடுமாறன்
எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டின் தாய் மொழியில் தான் வழிபாடு நடத்த வேண்டும் ஆனால் தமிழ்நாட்டில் அதற்கு நேர் எதிராக பல நூற்றுக்கணக்கான ஆண்டு நம்முடைய திருக்கோவில்களில் சமஸ்கிருத மொழியில் புரியாத மொழியில் சொல்லி வருகிறார்கள். நாம் அதைக் கேட்டுக் கொண்டும் இருக்கிறோம் இது ஒரு அடிமைத்தனம் என்றார்.
கோவில்களில் குடமுழுக்கு
இந்த அடிமைத்தனத்தை உடைத்தெரிய வேண்டும் என்பதுதான் இந்த கூட்டத்தின் நோக்கம். ஆயிரக்கணக்கில் பல்லாயிரக்கணக்கில் மக்களை திரட்டி கோவில்களில் குடமுழுக்கு தமிழ் தான் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் அழைப்பிதழ்களில் எழுத்து பிழை மட்டுமல்ல கருத்துப் பிழையும் இருக்கிறது. அவர்களுக்கு தமிழும் தெரியாது. சமஸ்கிருதமும் தெரியாது.
உண்மையில் சமஸ்கிருதம் தெரிந்தவர்களாக இருந்தால் அவர்கள் எந்த சமஸ்கிருதத்திற்காக வாதாடுகிறார்களோ அந்த சமஸ்கிருதத்தில் அழைப்பிதன் அடித்து கொடுத்திருக்க வேண்டியது தானே. பிரான்ஸ் நாட்டில் எழுத்து பிழையோடு வந்த பிரபலநாதன் நாளிதழை மூன்று நாள் நிறுத்தி வைக்க சொல்லி உத்தரவிட்டார்கள் ஆனால் நமது நாட்டில் பத்திரிகைகளில் எழுத்துக்களை கருத்து பிழையோடு தான் உள்ளது. அதெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியது தான்.
தேசிய தலைவர்
'மேதகு' தேசிய தலைவர் உயிரோடு தான் இருக்கின்றார் உரிய நேரத்தில் வெளியே வந்து போராட்டத்தை தொடங்குவார் என்பதை உறுதியாக சொல்லுகிறேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. தவெக அரசின் 100 நாளில் ஒரு ஆட்சியை மதிப்பிட முடியாது. எடுத்த எடுப்பிலேயே ஒரு ஆட்சியை குறை சொல்வும் முடியாது. ஓராண்டு காலம் கழித்து அதைப்பற்றி பேசலாம்.
ஜனநாயகம்
சட்டமன்றத்தில் தற்போது ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் பேசுகிறார்கள். எதிர்க்கட்சியின் நியாயமான கோரிக்கைகளை,கேள்விகளை எழுப்புகிறார்கள், குற்ற சாட்டை சொல்லுகிறார்கள் என்றால் அதை ஆளுங்கட்சி திருத்திக் கொள்ள வேண்டும். அது ஆளும் கட்சியின் கடமை இப்படி இரண்டு பேரும் இணைந்து செயல்படுவதற்கு பெயர்தான் நாடாளுமன்ற சம்பிரதாயம். ஹிட்லர் ஜனநாயகம் நமக்கு தேவை இல்லை. அது வரவும் கூடாது.
கர்நாடகா
கர்நாடகாவில் மேய்ச்சல் மாடு வீடு வரவில்லை என்று தேடிச்சென்ற மூன்று தமிழர்களை கர்நாடக வனத்துறை சுட்டுக்கொன்றது. அதற்கு முன்னால் அவர்களை அடித்து சித்தரவதை செய்திருக்கிறார்கள். இந்த பிரச்சனையை எழுப்பினால் கர்நாடக முதல்வர் சிவகுமார் கர்நாடகத்தின் உள் விவகாரம் இது தமிழ்நாட்டுக்காரர்கள் வேறு யாரும் பேசக்கூடாது என்று சொல்கிறார். இது எங்கள் மாநில பிரச்சினை இதில் வேறு யாரும் தலையிடக்கூடாது என்று சொல்வீர்கள் இது எந்த விதத்தில் நியாயம்" என்றார்.


Click it and Unblock the Notifications
