Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவை எதிர்க்கும் விஜய், அன்புமணி! 50,000 கொடுத்தாலும் ஜெயிக்க முடியாது! ஆர்பி உதயகுமார் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

மதுரை: விஜய், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் திமுகவை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள், ஒரு ஓட்டுக்கு 5000 கொடுத்தால் கூட திமுகவிற்கு மக்கள் வாக்களிக்க தயாராகவில்லை எனவும், 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க மக்கள் உறுதியாக உள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய அவர்," தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் SIR அதிமுக வரவேற்கிறது. இந்த சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் அரசியல் கட்சியின் சார்பில் பி.எல்.2 அதே போல அரசு அதிகாரிகளும் பி.எல்.ஒ.வாக உள்ளார்கள்.

RB Udayakumar Vijay Anbumani ramadoss

ஆர்பி உதயகுமார் பேச்சு

இதில் அரசியல் கட்சிகள் சார்பில் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் முறைகேடு செய்ய வாய்ப்பு உளளது என்று தலைமை தேர்தல் ஆணையத்திடம் கழகத்தின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திமுக இதில் முறைகேடு செய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் 2002, 2005 ஆகிய ஆண்டின் வாக்காளர்களை வைத்துதான் சரி பார்ப்பார்கள். இதில் வாக்காளர்களாக இல்லாதவர்கள் படிவம் 6 மூலம் சேர்க்கலாம். இதில் 20 மேற்பட்ட ஆவணங்கள் கேட்பார்கள். அதை எளிதாக வழங்க முடியும். ‌அதே போல மூன்று முறை வருவார்கள் அந்த சமயங்களில் வெளியூர் சென்றிருந்தால் உடனடியாக அவர்களுக்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும்.

திமுக ஊழல் குற்றச்சாட்டு

பசும்பொன் கிராமத்திற்கு எடப்பாடி வந்த பொழுது கிறிஸ்துவ பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறினார்கள். அதேபோல அங்கே திமுக சேலை அணிந்திருந்த பெண்கள் கூட எடப்பாடியாரிடம் இரட்டை இலையை காண்பித்தனர். இன்றைக்கு நகராட்சி நிர்வாகம் பதவி நியமனத்தில் ஒவ்வொரு பதவிக்கும் 25 லட்சம் லஞ்சம் பெறப்பட்டு எத்தனை கோடி என்று தெரியவில்லை? பள்ளிக்கரணையில் கட்டிடம் கட்டுவதற்கு 100 கோடி லஞ்சம், அதே போல மதுரை சேர்ந்த மாணவி கோவையில் பலாத்காரம் செய்து அவர் உயிர் ஊசலாய் வருகிறது. இதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகிறார். குற்றம் நடைபெறாமல் கூட தடுக்கத்தான் காவல்துறை ஸ்டாலினுக்கு தெரியவில்லை.

திமுக வாக்கு திருட்டு

கடந்த நான்கரை ஆண்டுகள் நான்கரை லட்சம் கோடி கடன், டாஸ்மார்க் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு உயர்வு, போதை பொருள் நடமாட்டம் ஆண்டு கூடி வருகிறது. மறுபுறமோ நெல்லின் ஈரப்பதத்தை காரணமாக காட்டி நெல் கொள்முதலை அரசு செய்ய மறுக்கிறது. இதனால் ரோட்டில் நெல்மணிகள் முளைத்து வருகிறது. இன்றைக்கு தமிழகமே குட்டிச் சுவராக உள்ளது. அதை மீட்டெடுக்க எடப்பாடியாரால் மட்டுமே முடியும். தென் மாவட்டங்களில் 60 தொகுதி உள்ளது. எடப்பாடி மகத்தான வெற்றியை பெறுவார்.

2026 தேர்தல்

தற்போது திமுக ஒரு ஓட்டுக்கு 5000 கொடுக்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. ஒரு ஓட்டுக்கு 50,000 கொடுத்தால் கூட திமுகவிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அதிமுகவில் நிரந்தர வாக்கு வங்கி உள்ளது தற்போது நடுநிலை வாக்காளர்கள் ,புதிய வாக்காளர்களை நாம் சந்திக்க வேண்டும். தற்போது 20 லட்சம் மடிக்கணினி வழங்கப்போகிறோம் என்று டெண்டர் விடுகிறார்கள் கடந்த நான்கரை ஆண்டு காலம் ஒரு மடிக்கணினி கூட வழங்கவில்லை. இளைஞர்கள் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள்.

விஜய் திமுக எதிர்ப்பு

இளைஞர்கள் எல்லாம் அதிமுக தான் வாக்களிப்பார்கள். 20 லட்சம் மடிக்கணினியை கூட எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வந்து வழங்குவார். நடிகர் விஜய் சிறப்பு பொதுக்குழுவில் பேசினார். அப்போது திமுக மீது மக்கள் கோபமாக உள்ளனர் என்று கூறுகிறார். அதே போல் அன்புமணி ராமதாஸ் திமுக மீது குற்றம் சாட்டியுள்ளார். நாங்கள் திமுகவை பற்றி குறை கூறினால் பிரதான எதிர்க்கட்சி என்று குற்றம் சுமத்துகிறார்கள் என கூறுவார்கள். திமுகவில் உள்ள தோழமைக் கட்சிகள் கூட்டணி தர்மத்திற்காக வாய் திறக்க மறுக்கிறது. 2026 ஆண்டில் மீண்டும் எடப்பாடியார் தான் முதலமைச்சர் மக்கள் முடிவு எடுத்து விட்டனர்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+