சூரியின் அம்மன் உணவகத்திற்கு சீல் வைக்க மனு! மதுரை GHல் செப்டிக் டேங்க் அருகே தயாராகும் உணவு?

Subscribe to Oneindia Tamil

மதுரை: நடிகர் சூரிக்குச் சொந்தமான மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் அம்மன் கேண்டீனுக்கு சீல் வைக்கக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் பறந்துள்ளன. இதனால் சூரிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகம் மதுரையில் பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. அந்த வகையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

madurai soori amman unavagam

இந்த மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் விடுதிக்கான கழிவுநீர் தொட்டி அமைந்துள்ள பகுதி அருகே அம்மன் உணவகத்தினர் ஆக்கிரமித்துள்ளதோடு, அதன் அருகே சமைக்க தேவையான காய்கறியை வெட்டுதல், உணவுப் பொருட்களைத் தயாரித்தல், பாக்கெட் போடுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த இடத்தில் எலி, கரப்பான்பூச்சி, பல்லி போன்றவை நடுமாடும் அளவுக்கு தரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறது. இதனால் நோய் தொற்று உருவாக வாய்ப்புள்ளது. இந்த மருத்துவமனைகளுக்கு வரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், பெரியவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள், புறநோயாளிகள், உள் நோயாளிகள் என அம்மன் உணவகத்திற்கு வந்து உணவு சாப்பிடுகிறார்கள்.

இது போல் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதால் உடல்நலம் பாதிக்கப்படும் சூழல் நிலவியது. எனவே தரமற்ற முறையில் பொதுமக்களுக்கு உணவு வழங்கி வரும் அம்மன் உணவகத்திற்கு சீல் வைக்க வேண்டும். அப்படி சீல் வைக்காவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து உணவகம் கூறியிருப்பதாவது: காழ்ப்புணர்ச்சி காரணமாக யாரோ தூண்டியதால் இப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்படும் என தெரிகிறது.பரோட்டா காமெடி மூலம் மக்களிடையே பிரபலமடைந்தவர் நடிகர் சூரி. தற்போது விடுதலை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் தீவிர ரஜினி ரசிகர். மதுரையில் உள்ள தியேட்டர்களில் ரஜினியின் படம் வந்தாலே விட மாட்டாராம். எப்படியாவது படத்தை பார்த்துவிடுவாராம். அப்படிப்பட்டவர் திரையுலகிற்கு வந்து அண்ணாத்த படத்தில் ரஜினியுடனே நடித்துள்ளார்.

சூரி மதுரையைச் சேர்ந்தவர். இவருக்கு மதுரை அம்மன் உணவகம் என்ற பெயரில் ஹோட்டல்கள் உள்ளன. மதுரை தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ் லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம் உள்ளிட்ட பல இடங்களில் அம்மன் என்ற பெயரில் உணவகங்கள் உள்ளன. கடந்த 2022 ம் ஆண்டு மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் அருகே உள்ள அம்மன் உணவகத்தில் ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணத்தை வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். அதன் பேரில் அந்த ஹோட்டலில் வணிக வரித் துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+