பாஸ்டர் செய்த பகீர் காரியம்.. அதிர்ந்த மக்கள்.. அள்ளி கொண்டு போன போலீசார்.. மதுரையில்!
மதுரையில் பைக் திருடிய மதபோதகர் கைது செய்யப்பட்டார்
மதுரை: பாஸ்டர் செய்த வேலையை பார்த்து அள்ளி கொண்டு போய்விட்டனர் மதுரை போரீசார்.. துருவி துருவி நடத்திய விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை மாவட்டம் தனக்கன்குளம் அருகே உள்ளது பர்மா காலனி.. இங்கு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருபவர் சாமுவேல்.. இவருக்கு விஜயன் என்று மற்றொரு பெயரும் உண்டு,
''கிறிஸ்தவ புல்டர்ஸ் அசெம்ப்ளி சபை'' என்ற ஒரு சபையை நடத்தி வருகிறார்.. சில நாட்களுக்கு முன்பு, மதுரை சுப்பிரமணியபுரத்தில் உள்ள மெக்கானிக் கடைக்கு ஒரு பைக்கை எடுத்து கொண்டு வந்தார்.. அந்த பைக்கை உடனே விற்க வேண்டும் என்றும் சொன்னார்.

கடையில் உள்ளவர்களும் பைக் பற்றின விவரத்தை கேட்டனர்.. அதற்கு சாமுவேல் திருதிருவென விழித்துள்ளார்.. இதை பார்த்ததும் மெக்கானிக்குக்கு சந்தேகம் வந்துவிட்டது.. உடனே சுப்பிரமணியபுரம் போலீஸாரிடம் தெரிவித்தார்.
போலீசாரும் விரைந்து வந்து சாமுவேலை பிடித்து விசாரித்தனர்.. அப்போது போலீஸ் தரப்பில் சொல்லப்படுவதாவது, "கம்பத்தை சேர்ந்தவர்தான் சாமுவேல்.. 2 வருஷத்துக்கு முன்பு தனக்கன்குளத்துக்கு வந்திருக்கிறார். 10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து, அங்கு மத பிரச்சாரம் செய்து வந்துள்ளார். ஆனால், சாமுவேல் அங்கீகரிக்கப்பட்ட திருச்சபையை சேர்ந்தவர் கிடையாது.
தற்போது லாக்டவுன் உள்ளதால், கையில் காசு இல்லை.. வாடகை தர முடியவில்லை.. அதனால்தான் பைக்கை திருட முடிவு செய்தார்.. திருமங்கலம், எஸ்எஸ் காலனி, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிறைய பைக்குகளை அவர் திருடியிருப்பதும் இப்போது தெரியவந்துள்ளது.
அவைகளில் சில வண்டிகளை அடகு வைத்து பணமும் வாங்கி உள்ளார்" என்றனர்.. தற்போது சாமுவேல் மற்றும் அவருக்கு உதவிய திருநகரைச் சேர்ந்த செல்வம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.. சாமுவேலிடம் இருந்து இதுவரை 12 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனவாம்!
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications