டமில்நடு வேண்டாம்! TAMILNADU ஆங்கில வார்த்தையில் ழ எழுத்தை சேர்க்கணும்! மதுரை கோர்ட்டில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆங்கில வார்த்தையில் தமிழ்நாடு என்ற பெயரில் ழ வரும் வகையில் அரசாணையில் மாற்றம் செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த செல்வக்குமார், இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ் மொழியின் சிறப்புமிக்க எழுத்தாக ழ எனும் எழுத்து உள்ளது. ஆனால் அரசாணைகளில் STATE GOVERNMENT OF TAMILNADU என குறிப்பிடப்பட்டு வருகிறது.

court legal tamil nadu

இந்த பெயரை பலர் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக டமில்நடு என உச்சரிக்க வழி வகை செய்யும். தமிழ் தெரியாதோருக்கு எழுத்துகளின் உச்சரிப்புதான் உதவும். அந்த வகையில் நம் மாநிலத்தின் பெயரை அவர்கள் தவறாக உச்சரிக்க வாய்ப்புகள் உள்ளன.

இதே ZHA என்ற ஆங்கில எழுத்தை பயன்படுத்தினால் பிறர் ழ என்ற உச்சரிப்புடன் படிப்பார்கள். எனவே சிறப்பு ழ இடம் பெறும் வகையில் THAMIZHL NAADU அல்லது TAHMIZHL NAADU என திருத்தம் செய்யக் கோரி கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தேன்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் எனது கோரிக்கை தொடர்பாக 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இருப்பினும் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழக அரசின் அரசாணை மற்றும் சுற்றறிக்கைகளில் ஆங்கிலத்தில் 'THAMIZHL NAADU' அல்லது 'TAHMIZHL NAADU' எனத் திருத்தம் செய்யவும், சேர, சோழ, பாண்டியர்களின் சின்னங்களை உள்ளடக்கி தமிழ்நாட்டிற்கான தனிக் கொடியை வடிவமைத்து பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் மனுவை விரைவாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+