BREAKING NEWS LIVE- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையால் தமிழக மக்களுக்கு பலன்- மோடி உரை

மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் தோப்பூரில் ரூ.1264 கோடியில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து அவர் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

PM Modi visits Madurai, Tamilnadu for AIIMS Foundation Ceremony - LIVE UPDATES

Jan 27, 2019, 1:09 pm IST

மதுரை பாஜக கூட்டத்தில் மோடி உரை நிறைவடைந்தது
Jan 27, 2019, 1:08 pm IST

ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் சென்னை-டெல்லி வரை பதற்றம்-மோடி
Jan 27, 2019, 1:08 pm IST

பயத்தாலும், எதிர்மறை எண்ணங்களாலும் எனக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளோர் - மோடி
Jan 27, 2019, 1:04 pm IST

10 சதவீத இட ஒதுக்கீடால் பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோருக்கு பாதிப்பு ஏற்படாது-மோடி

எதிர்மறை பிரச்சாரங்களை முன்னெடுப்போரிடம் தமிழக இளைஞர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்

Jan 27, 2019, 1:04 pm IST

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் என்னை வந்து பார்த்தனர்

தங்கள் சமூகத்திற்கு நியாயம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்

மாநில அரசாங்கம் இதுதொடர்பாக பரிசீலிக்க கேட்டுக்கொண்டுள்ளேன்- மோடி

Jan 27, 2019, 12:58 pm IST

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தூத்துக்குடி துறைமுகம் முக்கியமானது

தூத்துக்குடி துறைமுகம் தென் இந்தியாவிலேயே முக்கிய துறைமுகமாக முன்னேற்றப்படும்

இதன் மூலம் தூத்துக்குடியில் தொழில் முன்னேற்றத்திற்கு வழி ஏற்படுத்தப்படும் - மோடி

Jan 27, 2019, 12:56 pm IST

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பெரியார் நிலையம் அருகே சாலை மறியல்

திருமுருகன் காந்தி, முகிலன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது

Jan 27, 2019, 12:54 pm IST

நீண்ட கால கோரிக்கையான அதி விரைவு ரயில் சேவை தேஜஸ் இயக்கப்படும்

மதுரை-சென்னை நடுவே இந்த ரயில் இயக்கப்படும்

Jan 27, 2019, 12:47 pm IST

சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்தது தமிழகம்- மோடி

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அமைந்துள்ள பெருமை பெற்றது மதுரை

மதுரையில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன்- மோடி

Jan 27, 2019, 12:45 pm IST

பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை
Jan 27, 2019, 12:44 pm IST

10 லோக்சபா தொகுதிகள் சார்பில் சபதம் செய்கிறோம்

எத்தகையை தியாகத்தையும் செய்ய இந்த கூட்டம் தயாராக இருக்கிறது- தமிழிசை

தமிழகத்தில் பாஜக எங்கே எங்கே என்று கேட்டார்கள், ஆனால் மதுரையில் ஒன்று கூடிவிட்டனர்

Jan 27, 2019, 12:44 pm IST

தமிழகத்தில் தாமரை லட்சோப லட்சம் தாமரை மதுரையில் மலர்ந்துவிட்டது-தமிழிசை உணர்ச்சிமிகு உரை
Jan 27, 2019, 12:36 pm IST

தாமரை கூட்டத்தை பார்த்து சூரியன் மறைந்துவிட்டது- தமிழிசை
Jan 27, 2019, 12:36 pm IST

பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் உரை

எங்கே பார்த்தாலும் காவி மயமாகிவிட்டது என்பதை இந்த மதுரை கூட்டம் எடுத்துக்காட்டு

Jan 27, 2019, 12:35 pm IST

பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி
Jan 27, 2019, 12:30 pm IST

பிரதமர் மோடி உரையுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நிறைவுற்றது
Jan 27, 2019, 12:30 pm IST

எங்களது அரசு ஆரோக்கியத்துறையில் உலகிற்கே முன்னோடியாக இருக்கும்- மோடி

நன்றி, வணக்கம் என தமிழில் தெரிவித்து உரையை நிறைவு செய்தார் பிரதமர் மோடி

Jan 27, 2019, 12:26 pm IST

ஒன்றரை கோடி தமிழக மக்கள் பிரதமரின் காப்பீடு திட்டத்தில் பலன் அடைந்துள்ளனர்- மோடி

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆரோக்கியத்துறையில் புகழ் பெற்றது

மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை புகழ் பெறட்டும்

Jan 27, 2019, 12:26 pm IST

மதுரையில் எய்ம்ஸ் 1200 கோடிக்கும் மேற்பட்ட தொகையில் கட்டப்படும்

மொத்த தமிழக மக்களுக்கும் எய்ம்ஸ் உதவிகரமாக இருக்கும்

Jan 27, 2019, 12:25 pm IST

தே.ஜ.கூட்டணி ஆரோக்கியத்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறது- மோடி
Jan 27, 2019, 12:23 pm IST

மதுரையில் வந்துள்ள எல்லோருக்கும் என்னுடைய வணக்கம்- பிரதமர் மோடி

மீனாட்சி சுந்தரேஷ்வர் கோயிலுக்கு புகழ் பெற்ற மதுரைக்கு வந்துள்ளதற்கு மகிழ்கிறேன்- மோடி

Jan 27, 2019, 12:21 pm IST

தமிழகத்தில் 12 பாஸ்போர்ட் சேவை மையங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
Jan 27, 2019, 12:17 pm IST

நெல்லையில் அமையும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கடிட்டத்தை திறந்து வைத்தார் மோடி

150 கோடி செலவில் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கட்டிடம் அமைகிறது

Jan 27, 2019, 12:17 pm IST

மதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரியில் கூடுதல் வசதிகளை துவக்கி வைத்தார் மோடி

தஞ்சையில் மல்டி ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார் மோடி

Jan 27, 2019, 12:16 pm IST

ரிமோட் பொத்தானை அழுத்தியதன் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் மோடி
Jan 27, 2019, 12:16 pm IST

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய அரசு அறிவித்திருந்தது
Jan 27, 2019, 12:16 pm IST

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு வர வேண்டும் என கோரிக்கைவிடுத்தார்
Jan 27, 2019, 12:16 pm IST

தொற்று மற்றும் தொற்றா நோய்களை கட்டுப்பத்துவது, சிகிச்சையளிப்பதில் தமிழகம் முன் மாதிரி மாநிலம்
Jan 27, 2019, 12:16 pm IST

மகப்பேறு நலத்திட்டங்கள், குழந்தை நலத்திட்டங்களை சிறப்பாக செயலாற்றும் மாநிலம் தமிழகம்
Jan 27, 2019, 12:16 pm IST

நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் 3 முன்னிலை மாநிலங்களில் தமிழகம் ஒன்றாகும்- முதல்வர் உரை
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+