இதுதான் லோக் சபா தேர்தல் வாசகமா? மோடிக்காக புதிய முழக்கத்தை உருவாக்கிய தமிழிசை!
மதுரையில் இன்று பாஜக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பிரதமர் மோடிக்காக புதிய வாசகம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
Recommended Video

மதுரை: மதுரையில் இன்று பாஜக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பிரதமர் மோடிக்காக புதிய வாசகம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
லோக் சபா தேர்தலுக்கான தீவிரமான ஏற்பாடுகள் இந்தியா முழுக்க நடந்து வருகிறது. வடமாநிலங்களில் பாஜக இப்போதே தேர்தல் ஆலோசனைகள் பணிகளை தொடங்கிவிட்டது. தமிழகத்தில் பாஜக இன்னும் அப்படிப்பட்ட பணிகளை எதையும் செய்ய தொடங்கிவில்லை.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்றில் இருந்து பாஜகவின் தேர்தல் பணிகள் தொடங்கி இருக்கிறது. மதுரையில் இன்று பாஜக சார்பில் நடத்தப்பட்ட பெரிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

பொதுக்கூட்டம்
மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார். 12 மணிக்கு இந்த அடிக்கல் நாட்டு விழா நடந்தது.இதன் பின் 12 மணிக்கு மதுரையில் பாஜக சார்பில் நடத்தப்பட உள்ள பெரிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

பாஜக புத்துணர்ச்சி
1 மணி நேரம் இந்த பொதுக்கூட்டம்நடந்தது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை வர இருக்கும் இடத்திற்கு அருகிலேயே இந்த பொதுக்கூட்டம் நடந்தது. மோடியின் வருகையால் தமிழகத்தில் பாஜக உறுப்பினர்கள் புத்துணர்ச்சி பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

மோடி வருகை
இதில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் லோக் சபா தேர்தலில் மோடியின் தமிழக வருகை கண்டிப்பாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். மேலும் மதுரையில் தாமரைகள் மலர மலர உதயசூரியன் எங்களை என்ன செய்ய முடியும்.

புதிய வசனம்
இந்த ஆண்டில் மீண்டும் மோடி பிரதமராக வருவார். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் பாரதம் தழைத்தோங்க மீண்டும் மோடி வேண்டும் மோடி, என்று கூறினார். இந்த நிலையில் தமிழகத்தில் பாஜகவின் தேர்தல் வாசகமாக மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற வாசகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப் கீ பார் மோடி சர்க்கார் போல இது பயன்படுத்தப்படும் என்று கூறுகிறார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications