தேனியில் ஏப். 13-ம் தேதி மோடி பிரச்சாரம் செய்கிறார்… அமைச்சர் உதயகுமார் தகவல்
மதுரை: துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதி அதிமுக வேட்பாளருமான ரவீந்திர நாத்திற்கு ஆதரவாக ஏப்ரல் 13-ம் தேதி பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆம் தேதி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சென்னை வண்டலூர் அருகே நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இதற்கிடையே , ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழகம் வருகை தர உள்ள பிரதமர் மோடி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்திற்கு ஆதரவாக ஏப்ரல் 6-ம் தேதி முதலமைச்சர் பழனிசாமியும், 13-ம் தேதி பிரதமர் மோடியும் பிரச்சாரம் செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.
தேனி தொகுதியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும், அதிமுக வேட்பாளருமான ரவீந்திர நாத்திற்கு ஆதரவாக அமைச்சர் உதயகுமார், கிராம், கிராமமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, டிடிவி தினகரனின் சின்னமான பரிசுப் பெட்டியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications