Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீ வந்தால்தான் உன் அப்பா வருவார்.. மகன்களை அடித்து இழுத்து சென்ற மதுரை போலீஸ்! வெளியான வீடியோ

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அலங்காநல்லூரில் தந்தை மீதான புகாரில் அவரது மகன்களை அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது தொடர்பாக வீடியோ காட்சிகளும் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. நீ வந்தால் தான் உன் அப்பா வருவார் என்று, அவரது இரு மகன்களையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து செல்வதும், நாங்க என்ன சார் தப்பு செய்தோம் என இளைஞர்கள் கேட்கும் காட்சிகளும் இந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித் குமார் என்ற இளைஞர் மீது நகை திருடியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித் குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் அஜித் குமாரை தனியாக அழைத்து சென்று பிளாஸ்டிக் பைப் உள்ளிட்டவற்றால் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Police in Madurai beat and dragged sons after father failed to appear for questioning

இதையடுத்து தான் அஜித் குமார் தனிப்படை போலீசாரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவத்தில் போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. திருப்புவனம் சம்பவத்தை அடுத்து தமிழக காவல்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்த நிலையில், மதுரை அலங்காநல்லூரில், அப்பாவுக்கு பதிலாக மகன்களை பிடித்து போலீசார் விசாரித்த மற்றொரு வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக வீடியோ காட்சிகளும் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. நீ வந்தால் தான் உன் அப்பா வருவார் என்று, அவரது இரு மகன்களையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து செல்லும் வீடியோ இதில் பதிவாகி இருந்தது.

மதுரை அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையம்மாள். இவரது மருமகன் ஆண்டிச்சாமி. இவரது மகன்கள் யுவராஜ் மற்றும் தர்மராஜ். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண்டிச்சாமி தன் மகன்களின் திருமண செலவுக்காக 3 பவுன் தங்க செயினை வாங்கியுள்ளார். இதையடுத்து அந்த செயினை அடகு வைத்து பணத்தை திருமண செலவுக்கு பயன்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் சில நாட்கள் கழித்து வெள்ளையம்மாளுக்கும் ஆண்டிச்சாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நகையை திருப்பி தருமாறு வெள்ளையம்மாள் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் ஆண்டிச்சாமி நகையை திருப்பி தரமுடியாது என்று கூறியுள்ளார். இதனால் அவர் மீது மதுரை அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் வெள்ளையம்மாள் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் ஆண்டிச்சாமியை பிடித்து போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து நகையை கொடுப்பதாக அவர் வாக்குறுதி கொடுத்துள்ளார். குறிப்பிட்ட காலக்கெடு கொடுத்து அதற்குள் நகையை கொடுத்துவிடும்படி போலீசார் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் அவர் அப்போதும் நகையை கொடுக்கவில்லை. இதனால் மீண்டும் போலீஸ் நிலையம் சென்று வெள்ளையம்மாள் புகார் தெரிவித்து இருக்கிறார்.

இதையடுத்து தான் கடந்த 24.5.2025 அன்று போலீசார் ஆண்டிச்சாமியை தேடி அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதனால் வீட்டில் இருந்த அவரது மகன்கள் யுவராஜ் மற்றும் தர்மராஜ் ஆகியோரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். அப்போது தான் எங்களை ஏன் சார் அழைத்து வருகிறீர்கள்.. என இருவரும் போலீசாரிடம் கேட்டபோது நீ வந்தால் தான் உன் அப்பா வருவார் என்று போலீசார் கூறியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+