Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டி! திமுக எம்எல்ஏ தளபதிக்கு எதிராக காங்கிரஸ் போஸ்டர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திமுக தொகுதியான மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டி என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அத்தனை அறிவுறுத்தல்களை வழங்கியும், திமுகவுடன் காங்கிரஸி் கட்சி மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.

மதுரை வடக்கு தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருப்பவர் கோ.தளபதி. இவர் அண்மையில் நடந்த வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸை கடுமையாக விமர்சித்திருந்தார்.

Madurai North

மேலும் ஆட்சியில் பங்கு என கேட்கும் மாணிக்கம் தாகூருக்கும் ஜோதிமணிக்கும் கட்சி தலைமை சீட் கொடுக்கக் கூடாது என்றும் காங்கிரஸ் கட்சிக்கு பூத் கமிட்டி அமைக்கக் கூட ஆள்கள் இல்லை என்றெல்லாம் கடுமையாக விமர்சித்திருந்தார்.

தளபதி

இந்த நிலையில் கோ.தளபதியின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

சொந்த தொகுதி

இந்த நிலையில் கோ.தளபதியின் சொந்த தொகுதியான மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ஒட்டிய ஒரு போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வடக்கு தொகுதி

அதாவது "மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு, உங்கள் ஓட்டு கை சின்னத்திற்கு என மதுரை வடக்கு காங்கிரஸ் கட்சி" என்ற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொழிப் போர் தியாகிகள்

மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில், திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார். கூட்டணியின் மாண்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்த இந்த பேச்சு, தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி, கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சி

தளபதி தனது உரையில், "காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 3000 முதல் 4000 வாக்குகள் மட்டுமே இருக்கின்றன. ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் போன்றோருக்கு மீண்டும் சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற தேர்தலில் சீட் வழங்கக் கூடாது. அவர்கள் எப்படியோ எம்.பி.க்களாகிவிட்டனர். ஆனால் மற்றவர்கள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், யாருக்கு என்னவானால் என்ன என்று தற்போது அதுல பங்கு, இதுல பங்கு வேண்டும் என கேட்கிறார்கள்" என்று கூறினார்.

இந்தியா கூட்டணியே கிடையாது

மேலும், "திமுக இல்லையென்றால் 'இந்தியா' கூட்டணியே கிடையாது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர்தான் இக்கூட்டணியைக் காப்பாற்றி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு பூத் கமிட்டி அமைக்கக்கூட ஆட்கள் இல்லை. இத்தகைய சூழலில் அவர்கள் இப்படி பேசுவது மிகுந்த வேதனையாக இருக்கிறது" எனவும் தளபதி தனது விமர்சனங்களை முன்வைத்தார்.

அநாகரீகமான பேச்சு

இந்த அநாகரீகமான பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்தார். மொழி, சமூக நீதி, ஜனநாயக உரிமைகளுக்காக உயிர்நீத்த தியாகிகளின் நினைவை போற்ற வேண்டிய மேடையில், கூட்டணி கட்சியை இழிவுபடுத்தும் வகையில் பேசியது தேவையில்லாததும், கண்டிக்கத்தக்கதும் ஆகும் என்றும், கோ.தளபதி மீது தமிழக முதல்வர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பூத் கமிட்டி

காங்கிரஸ் பேரியக்கம் இன்று தமிழ்நாடு முழுவதும் வலுவான அமைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றும் செல்வப்பெருந்தகை தெளிவுபடுத்தினார். 100% பூத் கமிட்டி அமைக்கும் பணி நிறைவு பெறும் தறுவாயில் உள்ளதாகவும், 85% கிராம கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார். அமைப்பு சீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் மக்களின் உரிமை, மரியாதை, வாழ்வாதாரம் குறித்த போராட்டத்தை காங்கிரஸ் நேரடியாக மக்களிடையே கொண்டு செல்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாணிக்கம் தாகூர், ஜோதிமணி

கோ.தளபதியின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோர் ஏற்கெனவே விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.

22 ஆண்டுகளாக நண்பர்கள்

மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பதிவில், "22 ஆண்டுகளாக நண்பர்கள்,ஆன வெற்றிக்கு பிறகு பங்கு என கூறினால் எப்படி இப்படி தரம்தாழ்ந்து தளபதி அவர்கள் பேசுகிறார்?" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், "தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அவர்களுக்கு நன்றிகள். நாட்டைக் காக்க சங்கிகளை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் கொண்ட நாம் என்று வெல்வோம்" என்றும் அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+