அரசியல் தலைவர்கள் என்னை விட நடிக்கின்றனர்.. ஏமாந்துவிடாதீர்கள்... கமல்ஹாசன் பொளேர்
மதுரை: அரசியல் தலைவர்கள் என்னை விட நடிக்கின்றனர்; அதைக்கண்டு மக்கள் ஏமாந்துவிடாதீர்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், திருப்பரங்குன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மக்கள் நீதி மய்யத்தில் சாதி, மதம், பேதமில்லை; அன்பு, பாசம் மட்டுமே இருக்கிறது என்றார்.
மேலும், எங்கள் வேட்பாளர் முறையாக பணியாற்றாவிடில் நானே ராஜினாமா கடிதத்தை வாங்கி உங்களிடம் கொடுப்பேன் என்றும் கமல்ஹாசன் வாக்குறுதி அளித்தார். தலைவர்களை தேடாதீர்கள்; நீங்கள் தான் தலைவர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.
பல கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினார். ஓட்டுக்கு பணம் வாங்குவது, நம் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்வதைப் போல் ஆகிவிடும் என்றும் கூறினார். குழந்தை பருவத்தில் இருந்து தம்மை பராமரித்த தமிழகத்திற்கு கைமாறாக களத்தில் இறங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications