பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை நினைத்தாலே உடல் நடுங்குகிறது.. வைகோ வேதனை
Recommended Video

மதுரை: பொள்ளாச்சி சம்பவத்தில் யாராக இருந்தாலும் அனைவரும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அப்போது பேசியதாவது:
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேரதலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார்.

காரணம் ஏற்புடையதல்ல
21 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்தாமல் 3 தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்தாதற்கு தேர்தல் ஆணையம் கூறும் காரணம் ஏற்புடையதல்ல, முன்பு நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்த போது தேரதல் நடத்தப்பட்டுள்ளது. சித்திரை திருவிழா அன்று தேர்தல் நடைபெறுவதால் வாக்குப்பதிவு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, வாக்குப்பதிவை வேறு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது.

முகநூல் நட்பு
நட்பு என்ற பெயரில் முகநூல் மூலமாக இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ள பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்தையே உலுக்கும் சம்பவமாக உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பம் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மனம் நடுங்குகிறது
பொள்ளாச்சி சம்பவத்தை நினைத்தாலே மனம் நடுங்குகிறது. யாராக இருந்தாலும் அனைவரும் குற்றவாளி கூன்டில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும். சம்பவத்தின் பின்னனியில் யாராக இருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.

மோடியின் கருத்தா?
கர்நாடகாவில் 22 மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்று சட்டசபையை மாற்றியமைப்போம் என எட்டியூரப்பா கூறிய கருத்திற்கு புல்வாமா தாக்குதலினால் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு வானுயர்ந்து விட்டதாக எட்டியூரப்பா கூறியது கருத்தா அல்லது மோடியின் கருத்தை பிரதிபலிக்கிறாரா என தெரியவில்லை. இதே போன்று அடிக்கடி எட்டியூரப்பா தவறான கருத்துக்களை பேசி வருகிறார் என்று பதிலளித்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications