தேர்தலுக்கு முன் ஹாட்பாக்ஸ்.. தேர்தலப்போ ஸ்வீட் பாக்ஸ்! மதுரையை கலக்கும் வகை வகையான பொங்கல் பரிசுகள்
மதுரை: 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் வலுவை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருகின்றன. அதற்கான ஒரு பகுதியாக, பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கும் நடவடிக்கைகள் மதுரையில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதனால் உற்சாகமாகியிருக்கின்றனர் தொண்டர்கள்.
கடந்த சில வாரங்களாக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கிளை, பகுதி, ஒன்றியச் செயலாளர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், பொதுமக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கு நேரடி பரிச்சயம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த தீபாவளி பண்டிகையிலும், கிளை, பகுதி மற்றும் ஒன்றியச் செயலாளர்களுக்கு புத்தாடை, பட்டாசு மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கான தீபாவளி விழாக்களும் நடத்தப்பட்டிருந்தது.

மதுரை பொங்கல் பரிசு
இதேபோல், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கிளை, பகுதி, ஒன்றியச் செயலாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தொகுதிகளில், நிர்வாகிகளுக்கு வட்டி, சட்டை போன்ற உடை பொருட்களையும் கொடுக்கப்படுகிறது. திமுக நிர்வாகிகள் கூறும் போது, மாவட்ட, ஒன்றிய, கிளை பிரதிநிதிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. கிளைச் செயலாளர்கள் ரூ.2,000, வட்டச் செயலாளர்கள் ரூ.5,000, ஒன்றிய மற்றும் பகுதி செயலாளர்களுக்கு ரூ.10,000 அளவில் ரொக்கப்பணம் வழங்கப்படுகிறது.
திமுக பொங்கல் நிகழ்ச்சி
அதே நேரத்தில், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வகைகள், ஹாட்பாக்ஸ், டிபன் கேரியர்கள், பாத்திரங்கள் மற்றும் பிற பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறார்கள். இதோடு, முதல்வரின் பொங்கல் வாழ்த்துக் கடிதமும் வழங்கப்படுகிறது. வாக்குச் சாவடிகள் வாரியாக, பெண்கள் 10 பேருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதிமுக
இதுபோல், ஆளும்கட்சியான அதிமுகவும் பொங்கல் பரிசு வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை மேற்கு, மதுரை வடக்கு மற்றும் மேலூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில், அதிமுக எம்எல்ஏக்கள் பொதுமக்களுக்கு குடம், டிபன் பாக்ஸ், சேலை மற்றும் பாத்திரங்களை பொங்கல் பரிசுகளாக வழங்கி வருகின்றனர். அதிமுக பிரமுகர், மருத்துவர் மாநகர டாக்டர் சரவணன், தனது தொகுதிகளில் பொதுமக்களுக்கு பரிசு வழங்கும் பணியை தொடர்ந்தும் நடத்தியுள்ளார்.
டாக்டர் சரவணன்
மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் விருப்ப மனு அளித்திருக்கும் நிலையில், அவரின் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பொங்கல் விளையாட்டு போட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கான பரிசு வழங்கல் நிகழ்வுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. திருப்பரங்குன்றம் மதுரை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் அவர் போட்டியிடலாம் என சொல்லப்படும் நிலையில் தற்போது அந்த பகுதிகளில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருவதோடு பொதுமக்களுக்கும் பரிசு பொருட்களை வழங்கி வருகிறார்.












Click it and Unblock the Notifications