நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே மின்வெட்டு.. இருளில் மூழ்கிய அரங்கு! அமைச்சர் அப்செட்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே மின்வெட்டு ஏற்பட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. மதுரை அரசு சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி ஏடி ஜெகதீஷ் சந்திரா பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த அரங்கு இருளில் மூழ்கியது. இதனால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. திடீர் திடீர் என மின் தடை ஏற்படுவதால் மக்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். காற்றாலை மின் உற்பத்தி குறைந்து இருப்பதாகவும், அண்டை மாநிலங்களில் கூட மின் தட்டுப்பாடு இருப்பதாகவும் தவெக அமைச்சர்கள் சாக்குபோக்கு கூறியதையும் பார்க்க முடிந்தது.

Power outage at Madurai college event attended by Minister Nirmal Kumar Venue plunged into darkness

நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்வெட்டு

தலைநகர் சென்னை முதல் கடைகோடியில் இருக்கும் கன்னியாகுமரி வரை பாரபட்சம் இல்லாமல் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்வதாக மக்கள் வேதனைபட்ட நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தான் முதல்வர் விஜய் மின்னகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, 'மக்களுக்கு தடையற்ற மற்றும் சீராக மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என மின் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முதல்வர் விஜய் ஆய்வுக்கு பிறகு மின் வெட்டு குறையும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், பழைய கதையே தொடர்வதை பார்க்க முடிகிறது. அந்த வகையில்தான் மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே மின் தடை ஏற்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. மதுரை அரசு சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா மற்றும் மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.

இருளில் மூழ்கிய அரங்கு

பட்டமளிப்பு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி ஏடி ஜெகதீஷ் சந்திரா பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த அரங்கு இருளில் மூழ்கியது. இதனால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், சில நிமிடங்களில் மின்சாரம் மீண்டும் வந்தது. இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதி தனது பேச்சை தொடங்கினார். தமிழகத்தில் மின் பற்றாக்குறை எதுவும் இல்லை என்று தினம் தோறும் அமைச்சர் நிர்மல் குமார் கூறி வரும் நிலையில், அவர் பங்கேற்ற நிகழ்ச்சியிலே மின் தடை ஏற்படுகிறதே என்று பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மாணவ மாணவிகள் முனுமுனுத்தையும் பார்க்க முடிந்தது.

அமைச்சர் அப்செட்

இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரம், மதுராந்தகம் தொகுதியிலும் மின்வெட்டு ஏற்படுவது தவெகவினர் மத்தியிலே தர்மசங்கடத்தை எற்படுத்தியது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அச்சிறுப்பாக்கத்தில் நடைபெற்ற தவெக முகவர்கள் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசும் போது, திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. உடனே அப்செட் ஆன ஆதவ், ஜெனரேட்டரை ஆன் செய்யுங்கள் என்றார். சிறிது நேரத்தில் மீண்டும் மின்சாரம் வந்தது. அதேபோல, தாராபுரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் உள்பட அமைச்சர்கள் பலர் பங்கேற்ற நிகழ்ச்சியிலும் மின்வெட்டு ஏற்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+