மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணா, எம்ஜிஆர், அதற்கு பிறகு எடப்பாடியார்தாங்க.. அடேங்கப்பா பிரேமலதா.. அப்போ கன்பார்ம்தான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்கவின் பஃபல்லோ பண்ணையில் அசத்திய எடப்பாடியார் | CM Edappadi Palanisamy Us Visit

    மதுரை: ஆஹ.. அதிமுகவுடனான தேமுதிகவின் கூட்டணி இன்னும் உறுதியாகத்தான் இருக்கிறது என்பது பிரேமலதா பேட்டியின் மூலம் நன்கு தெரிகிறது.

    அப்படி என்ன பேட்டி என்கிறீர்களா. மதுரையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டிதான் அது. லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அதிமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக. ஆனால், இந்த கூட்டணியால் தேனியை தவிர வேறு எங்கும் வெல்ல முடியவில்லை.

    அதிலும், தேமுதிகவுக்கு பலத்த பின்னடைவுதான் ஏற்பட்டது. இந்த நிலையில்தான், அடுத்த உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக, தேமுதிக இந்த கூட்டணிக்கு குட்பை சொல்லுமோ என்ற எதிர்பார்ப்பு பிற கட்சிகளிடம் ஏற்பட்டது. அந்த கட்சி தொண்டர்களிடமும் கூட ஏற்பட்டது.

    தமிழிசை எந்த மாநிலத்துக்கு கவர்னராக போகிறார் என்பது கூட பிரேமலதாவுக்கு தெரியலையே!தமிழிசை எந்த மாநிலத்துக்கு கவர்னராக போகிறார் என்பது கூட பிரேமலதாவுக்கு தெரியலையே!

    சந்தேகம் இல்லை

    சந்தேகம் இல்லை

    ஆனால், பிரேமலதாவின் மதுரை பேட்டி இந்த சந்தேகங்களை தவிடுபொடியாக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பேசியுள்ளார் பிரேமலதா. அவர் சொன்னதை பாருங்கள்:

    தமிழிசைக்கு வாழ்த்து

    தமிழிசைக்கு வாழ்த்து

    தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழிசையை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

    அறிஞர் அண்ணா

    அறிஞர் அண்ணா

    எதிர்க்கட்சி என்பதால் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக உள்ளது. முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளனர். அதே போலத்தான் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வெளிநாடு சுற்றுப் பயணம் சென்றுள்ளார்.
    தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில்தானே அவர் போயுள்ளார். அதை தப்பா பார்க்கக்கூடாது.
    முதல்வரின் முயற்சி வரவேற்கத்தக்கது.

    விமர்சனம் தேவையில்லை

    விமர்சனம் தேவையில்லை

    தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் மேலாண்மை செய்ய முடியும் என்று முதல்வர் கூறிவிட்டுதான், வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். எனவே அவரது வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது சரியல்ல. இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.

    English summary
    The DMK is intent on opposing everything because it is the opposition. Former chief ministers Anna and MGR have gone abroad. Similarly, the current Chief Minister of Tamil Nadu Edappadi Palanisamy has also traveled abroad, says Premalatha Vijayakanth.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X