முத்துராமலிங்க தேவர் பெயர் வேண்டும்.. இன்டிகோ விமானத்திற்குள்ளே போராட்டம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்
மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட கோரி சென்னையில் இருந்து மதுரை வரும் இன்டிகோ விமானத்திற்குள் புகுந்து பார்வார்ட் பிளாக் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டக்கோரி முக்குலத்தோர் சமூகத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், சென்னையிலிருந்து திருச்சி வழியாக இன்று சென்ற இன்டிகோ விமானத்திற்குள் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் முருகன் ஜி தலைமையில் பயணிகள்போல போராட்டக்காரர்கள் சிலர் இருந்துள்ளனர்.

விமானம் திருச்சியை கடக்கும்போது திடீரென கொடிபிடித்து உள்ளேயே போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். முத்துராமலிங்கத்தேவருக்கு ஜே என கோஷமிட்டனர். இதனால், பதட்டமடைந்த விமான ஊழியர்கள், சென்னை மற்றும் மதுரை விமான நிலையங்களுக்கு தகவல் தெவித்துள்ளனர்.
மதுரை விமான நிலையத்தில் உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிர காண்காணிப்பு பணியில் ஈடுபடத் தொடங்கினர். பெருங்குடி காவல் நிலைய காவலர்கள் மதுரை விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.

இதனால் மதுரை விமான நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விமானம் தரை இறங்கிய பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் போலீசார் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மதுரை விமான நிலையத்தில் குவிந்த ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். முருகன்ஜி மற்றும் அவருடன் சேர்ந்து விமானத்தில் கோஷமிட்ட 8 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சக பயணிகளையும் பீதிக்குள்ளாக்கியது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications