“பிணம் தின்னிக் கழுகு மாதிரி”.. பிடிஆர் பதிவிட்ட ட்வீட்டால் பரபரப்பு! யாரை சொல்றாரு?

Subscribe to Oneindia Tamil

மதுரை: திமுக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "தனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத நூற்றுக்கணக்கான விஷயங்களுக்குப் பெருமை தேடிக்கொள்வதில் இவர் கில்லாடி. பல மைல் தூரத்திலிருந்தே பிணத்தின் வாசனையை உணரும் கழுகு மாதிரி" என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பற்றிப் பதிவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். வீரவசந்தராயர் மண்டபம் மீளுருவாக்கம் செய்யப்பட்டது பற்றிய அந்தப் பதிவில், "தமிழக வரலாற்றில் மன்னராட்சி காலத்திற்குப் பிறகு இவ்வளவு உயரமான கல் மண்டபம் இப்பொழுதுதான் எழுப்பப்பட்டுள்ளது. வீரவசந்தராயர் மண்டபத்தை சிறப்புற மறுஉருவாக்கம் செய்துள்ள தலைமை சிற்பி வி. பி. வேல்முருகன் அவர்களுக்கும், அவருடன் இணைந்து செயல்பட்ட சிற்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை உரித்தாக்குகிறேன்.

PTR Palanivel Thiagarajan Takes Swipe at Su Venkatesan Compares Him to a Vulture

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் கிழக்கு கோபுரத்தை அடுத்துள்ளது வீரவசந்தராயர் மண்டபம். ஏறத்தாழ 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வரலாற்றுச் சிறப்பும் கலைச் சிறப்பும் ஒருங்கே அமைந்த மண்டபம்.

2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த தீ விபத்தில் மண்டபத்தின் பெரும்பகுதி தீக்கிரையானது. அழகிய கற்பாறைத் தூண்களையும் மரத்தாலான உத்தரம் மற்றும் மேற்கூரைகளையும் இழந்தோம். இந்நிலையில், இதனை மீண்டும் புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து முயற்சி எடுத்தது.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், இத்திருப்பணியின் தொடக்கத்தில் அவரோடு முழுமையாக உடன் நின்றேன் என்பதைப் பெருமையோடு பதிவு செய்கிறேன். சுமார் பத்தாண்டுகால முயற்சியின் பலனாக இக்கல் மண்டபம் எழுப்பப்பட்டுப் பணிகள் நிறைவுபெற்றுள்ளன." எனப் பதிவிட்டிருந்தார்.

நெட்டிசன் ஒருவர் சு.வெங்கடேசனின் இந்தப் பதிவைக் குறிப்பிட்டு, இந்து சமய அறநிலையத்துறை விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னர் குறிப்பிட்டது இந்த நபரைத்தானா எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

PTR Palanivel Thiagarajan Takes Swipe at Su Venkatesan Compares Him to a Vulture

அதற்கு பதில் அளித்துள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "இல்லை... இல்லை... இவர் வேறு வகை - தனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத நூற்றுக்கணக்கான விஷயங்களுக்குப் பெருமை தேடிக்கொள்வதில் மட்டுமே இவர் கில்லாடி. பல மைல் தூரத்திலிருந்தே பிணத்தின் வாசனையை உணரும் கழுகைப் போன்றவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மதுரை மக்களவைத் தொகுதி எம்.பியாக உள்ளார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 2016 முதல் 2026 வரை 10 ஆண்டுகளாக மதுரை மத்திய தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருந்தவர். 5 ஆண்டுகாலம் அமைச்சராகவும் பணியாற்றினார். இந்நிலையில், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து பிடிஆர் தெரிவித்துள்ள கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+