Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாமா உங்களை மறக்கவே மாட்டேன்.. மதுரை ரயில் தீவிபத்து குறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் மாமா உங்களை மறக்க மாட்டேன் என கூறிவிட்டு சென்றதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சுமார் 63 பேர் கொண்ட குழுவினர் கடந்த 17ஆம் தேதி புறப்பட்டு ஆன்மீக சுற்றுலா வந்தனர். அவர்கள் வந்த ரயில் பெட்டிகள் மதுரை ரயில்வே சந்திப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

PTR Palanivel Thiyagarajan says about rescue activities of Madurai train fire accident

அப்போது அந்த ரயில் பெட்டியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் 6 ஆண்கள், 3 பெண்கள் என 9 பேர் தீயில் கருகி உயிரிழந்துவிட்டனர். இந்த விபத்திற்கு காரணம் ரயில் பெட்டியில் சிலிண்டரை பயன்படுத்தி டீ போட முயன்றதுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த எஸ்.எஸ்.காலனி போலீஸார் நேரில் சென்று மீட்பு பணிகளை செய்தனர். அப்போது ஒரு கழிவறை முழுவதும் சமையல் செய்ய டபராக்கள், அண்டாக்கள், பாத்திரங்கள், விறகு கட்டைகள், மண்ணெண்ணெய் உள்ளிட்டவை இருந்தன. இந்த பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்ல தடை இருக்கும் போது இதை அவர்கள் எப்படி கொண்டு வந்தார்கள் என தெரியவில்லை.

இந்த விபத்தில் இறந்த 9 பேருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அது போல் தலா ரூ 3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ரயில் விபத்து குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மாமா உங்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என தீவிபத்துக்குள்ளாகிய சுற்றுலா வந்திருந்த சிறுவன் தெரிவித்திருந்தான். ஒரு முதியவர் கூறுகையில் எரிந்து கொண்டிருந்த நெருப்பிலிருந்து இறைவன் எங்களை காப்பாற்றினார். அதன் பிறகு நீங்கள் அனைவரும் எங்களை மிக நன்றாக கவனித்துக் கொண்டீர்கள். உங்கள் மீது நாங்கள் அதீத நன்றி உணர்வுடன் உள்ளோம். எங்கள் மாநிலத்திற்கும் உங்களை போன்று எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் கிடைப்பார்கள் என்றார்.

துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு உதவுவதை இயற்கையாகவே கொண்டுள்ள ஒரு சமூகத்தின் வழித்தோன்றல் என்ற முறையில் அந்த தொகுதியின் எம்எல்ஏ என்ற முறையிலும் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னால் முடிந்ததை செய்தேன். விபத்து நடந்த போது நான் சென்னையில் இருந்தாலும் நான் மதுரை விரைந்த அதே விமானத்தில் விபத்தின் நிவாரண பணிகளை பார்வையிட தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கும் வந்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இறந்தவர்களின் உடல்களை அவர்களின் வீட்டுக்கு விரைவாக அனுப்பி வைத்தோம். மிகக் குறுகிய நேரத்தில் பிரேத பரிசோதனைகள் மற்றும் விசாரணைகளை முடித்து இறந்தவர்களின் சடலங்களை ஒப்படைத்து உதவிய அரசு ராஜாஜி மருத்துவமனை டீம் மற்றும் மதுரை காவல் ஆணையருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீட்கப்பட்ட பயணிகள் வீடு திரும்ப 24 மணி நேரம் முதல் 36 மணி நேரம் வரை இருந்தது. அதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்ல விருப்பம் தெரிவித்த பயணிகளை அங்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தோம். ஏனெனில் அதுதான் அவர்கள் மதுரைக்கு சுற்றுலா வந்ததன் முதல் காரணம். எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழாமல் இருக்க, முழுமையான விசாரணையும் அதன் விளைவாக தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட வேண்டும். ரயில்வே துறை இதைக் கவனத்தில் கொள்ளும் என்று நம்புகிறேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+