சுந்தர் சிக்கு கிடைத்த டிரம்ப் கார்டு.. விடாமல் விரட்டும் பிடிஆர்! பாயிண்ட் எடுத்து கொடுத்துட்டாரே!
மதுரை: தமிழக அரசியலில் 'பகீர்' கிளப்புவதில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு எப்போதுமே ஒரு தனி பாணி உண்டு. ஆனால், சமீபகாலமாக இயக்குநர் சுந்தர் சி-யை நோக்கி அவர் வீசும் விமர்சனக் கணைகள், 'தேவையற்ற கவனத்தை' சுந்தர் சி மீது குவியச் செய்கிறதோ என்ற முணுமுணுப்பை அறிவாலய வட்டாரத்திலேயே கிளப்பியுள்ளது.
ஒரு பக்கம் உலகளாவிய பொருளாதாரக் கொள்கைகளைப் பேசும் பி.டி.ஆர், இன்னொரு பக்கம் சினிமா பிரபலம் இல்லாத வேட்பாளர் மீதான விமர்சனங்களில் இவ்வளவு தீவிரம் காட்டுவது, "களத்தில் இல்லாத ஒருவருக்கு தேவையில்லாமல் ரெட் கார்பெட் விரிப்பது போல் இருக்கிறது" என்கிறார்கள் விபரமறிந்த உடன்பிறப்புகள்.

இதற்கு உதாரணமாக 2021 சட்டமன்றத் தேர்தலைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஆயிரம் விளக்குத் தொகுதியில் நட்சத்திர வேட்பாளராக குஷ்பூ களமிறங்கியபோது, அவரை எதிர்த்து நின்ற டாக்டர் எழிலன் நாகநாதன் கையாண்ட விதம் மிக நுணுக்கமானது. குஷ்பூவின் பிரபல்யத்தைக் கண்டு பதறாமலோ அல்லது அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி அவருக்குத் தேவையற்ற முக்கியத்துவத்தைக் கொடுக்காமலோ, தன் கவனத்தை முழுக்க மக்கள் பணிகளிலும் தொகுதியின் அடிப்படைத் தேவைகளிலும் மட்டுமே வைத்தார் எழிலன்.
முக்கியமாக குஷ்பு என்ன பேசினாலும் அதை எழிலன் கண்டுகொள்ளவில்லை. அந்த 'சைலண்ட்' அணுகுமுறைதான் குஷ்பூவின் பிம்பத்தை உடைத்து, எழிலனைப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது.
ஆனால், தற்போது பி.டி.ஆர் செய்யும் காரியமோ இதற்கு நேர் எதிராக இருக்கிறது. சுந்தர் சி-யை எதிரியாகப் பாவித்து அவர் அடுக்கும் பதிலடிகளும், கொடுக்கும் முக்கியத்துவமும், உண்மையில் சுந்தர் சி-க்கு ஒரு அரசியல் அங்கீகாரத்தைத் தேடித்தருவது போல் அமைந்துவிட்டது. "அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் ஆக்ரோஷம் காட்டி, ஒரு சினிமா பிரபலத்தை அரசியல் சக்தியாக உருவகப்படுத்துவது பி.டி.ஆரின் ராஜதந்திரத்திற்கே பின்னடைவுதான்" என்கிறது அரசியல் மேடை.
என்ன நடக்கிறது மதுரை மத்தியில்?
வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதுரை மத்திய தொகுதியில் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் பா.ஜ.க வேட்பாளர் சுந்தர் சி இடையேயான வார்த்தைப் போர், இப்போது தனிநபர் விமர்சனங்களாகவும், 'எக்ஸ்' (Twitter) தள யுத்தமாகவும் மாறியுள்ளது.
"10 ஆண்டு கால அரசியல் பழக்கத்தை மாற்றிக்கொண்டேன்" - பி.டி.ஆர் ஆவேசம்
இதுவரை தனது தேர்தல் பிரச்சாரங்களில் தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்து வந்த பி.டி.ஆர், முதன்முறையாக மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனது பதிவில் அவர் குறிப்பிட்டதாவது:
"மதுரைக்காக எதுவுமே செய்யவில்லை என்று கொள்கையற்றவர்கள் தொடர்ந்து கிளிப்பிள்ளை போல பேசி வருகிறார்கள். தரவுகள், வரலாறு, நிர்வாக அறிவு என எதுவுமே இல்லாமல் கட்டண விளம்பரங்கள் மூலம் (Paid Promotion) அறியாமையைப் பரப்புபவர்களுக்கு வெளிச்சம் காட்ட வேண்டியது என் கடமை. இனி என் ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டமும் அந்த 'சினிமா சங்கி'க்கு மதுரையைப் பற்றிய பாடமாக அமையும்."
மேலும், சுந்தர் சி-யை வழிநடத்தும் கட்சித் தலைமையை 'சாதியவாத கட்சி' என்றும், ஒரு நபரின் பாதுகாப்புக்காக மட்டுமே நடத்தப்படும் கட்சி என்றும் பி.டி.ஆர் சாடியுள்ளார்.
"தி.மு.க-வின் கலாச்சாரமே இதுதான்!" - குஷ்புவின் பதிலடி
பி.டி.ஆரின் இந்த விமர்சனத்திற்கு பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் குஷ்பு சுந்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க-வை விட்டு வெளியேறியது சரியான முடிவுதான் என்பதை இது நிரூபிப்பதாக அவர் கூறியுள்ளார்.
குஷ்புவின் பதில்:
"வாதங்கள் தோற்கும்போது, தி.மு.க-வினர் கீழ்த்தரமான வசவுகளையும், தனிநபர் தாக்குதல்களையும் கையில் எடுக்கிறார்கள். இது தற்செயலானது அல்ல, இதுதான் அவர்களின் கலாச்சாரம். பெண்களை இழிவுபடுத்துவதும், மிரட்டுவதும் அவர்களின் ரத்தத்தில் ஊறியுள்ளது. எத்தனை பட்டங்கள் இருந்தாலும், அடிப்படை பண்பு இல்லையென்றால் அந்த கல்வி வீண். நானும் என் கணவர் சுந்தர் சி-யும் இந்த நிலைக்குத் தாழ மாட்டோம்."
"விக்டிம் கார்டு விளையாடாதீர்கள்!" - பி.டி.ஆர் வெளியிட்ட 2 கேள்விகள்
குஷ்புவின் 'பெண்கள் பாதுகாப்பு' மற்றும் 'கலாச்சாரம்' குறித்த குற்றச்சாட்டுக்கு பி.டி.ஆர் உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். தான் கேட்ட கேள்விகளில் எங்கே 'அசிங்கம்' இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பி.டி.ஆர் முன்வைக்கும் வாதங்கள்:
கொள்கை மாற்றம்: "நீங்கள் மூன்று கட்சிகளுக்கு மாறியது உண்மைதானே? இதில் என்ன ஆபாசம் இருக்கிறது? தவறு என்றால் நிரூபியுங்கள், நான் மன்னிப்பு கேட்கிறேன்."
குப்பை வரி சர்ச்சை: "கடந்த டிசம்பர் மாத நிகழ்வில், குப்பை வரி விதிப்பதுதான் தீர்வு என நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் விளக்கமளித்தேன். அந்த உரையாடலை மறுக்கிறீர்களா?"
மேலும் சுந்தர் சி-யைப் பற்றி குறிப்பிடுகையில், "அவர் மதுரையைப் பற்றி எதுவும் தெரியாத வெளிநபர். அ.தி.மு.க ஆட்சியில் நடந்த ஊழல் நிறைந்த 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்களைப் பெருமையாகப் பேசுகிறார். அவர் காற்றைத் தூவியிருக்கிறார், இப்போது சூறாவளியை அறுவடை செய்வார். மதுரைக்கு நல்வரவு!" என எச்சரிக்கும் தொனியில் முடித்துள்ளார்.
மதுரையில் நிலவும் பரபரப்பு
நிதியமைச்சராக இருந்து தற்போது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருக்கும் பி.டி.ஆர்-ன் ஆவேசமான இந்த முகம் மதுரை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், சுந்தர் சி தரப்போ, தி.மு.க-வின் இந்தத் தாக்குதல்களைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றி, 'மக்களுக்கான போராட்டமாக' முன்னெடுத்து வருகிறது.
மதுரை மத்திய தொகுதியில் நிலவும் இந்த 'பிக் பாஸ்' லெவல் மோதல், தேர்தல் களத்தை தற்போதே சூடாக்கியுள்ளது.
-
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications