மதுரையில் மாஸ் காட்டப் போறாரு டாக்டர் கிருஷ்ணசாமி! புதிய தமிழகம் மாநில மாநாடு! அதிமுகவா? தவெகவா?
மதுரை: புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு வரும் இன்று மதுரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என கூறியிருக்கிறார் அந்த கட்சியின் தலைவரான டாக்டர்.கிருஷ்ணசாமி. அதிமுக பாஜக கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என அரசியல் நிபுணர்கள் சொல்லி வரும் நிலையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு வருகிறார் கிருஷ்ணசாமி. இதனால் என்ன முடிவை அவர் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மாநாடு பொதுக்கூட்டம் மக்கள் சந்திப்பு என மிகவும் பிஸியாகி விட்டன. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த் என பலரும் நடை பயணங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும் சமுதாய அமைப்புகளும் 2026 தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தங்கள் பலத்தைக் காட்ட மாநாடுகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில் மதுரையில் இன்று மாநாட்டை நடத்துகிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி.

புதிய தமிழகம் மாநாடு
இது அந்த கட்சியின் ஏழாவது மாநில மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மெயின் ரோடு பாண்டி கோயில் அருகே மாலை மூன்று மணிக்கு தொடங்கும் இந்த மாநாடு 10:00 மணி வரை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை என்ற மூன்று குறிக்கோள்களை கருப்பொருளாக கொண்டு இந்த மாநாடு நடக்கிறது.
டாக்டர் கிருஷ்ணசாமி
2026 சட்டசபை தேர்தல் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், மாற்று கட்சித் தலைவர்கள் யாரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறியிருக்கிறார் கிருஷ்ணசாமி. 2026 சட்ட சபை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி கூட்டணி குறித்து இன்னும் இறுதியான முடிவுகள் வெளியிடப்படவில்லை.
அதிமுக பாஜக கூட்டணி
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவுடன் அதிமுகவுடனும் அல்லது இரு கட்சிகளுடனும் சேர்ந்து கூட்டணி வைத்து இருக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. இந்த நிலையில் இந்த மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பெரும்பாலும் அதிமுக பாஜக கூட்டணிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம்
அதே நேரத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுவெளியில் அடிக்கடி வலியுறுத்தி வந்தார் கிருஷ்ணசாமி. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் குறித்து அடிக்கடி கருத்துக்களை சொல்லி வருகிறார். அது ஓரளவு அவருக்கு ஆதரவாகவே இருக்கிறது. இதனால் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்கின்றனர் புதிய தமிழகம் கட்சியினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications