வேடிக்கை பார்க்க வந்த டிடிவி தினகரன்..விஜய் சீனியர் கூட பரிட்சை எழுதனும்! சொல்கிறார் ஆர்பி உதயகுமார்
மதுரை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதாக நினைக்கிறேன் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருந்தார். இந்நிலையில், வேடிக்கை பார்க்கும் தினகரன் கருத்துக்கு பதில் சொல்லி பெரிதாக்க வேண்டாம் எனவும், விஜய் அனுபவம் உள்ளவர்களுடன் பரிச்சை எழுத வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் தற்போதே அரசியல் களம் சூடாகிவிட்டது. தமிழகத்தின் புதிய வரவான விஜயின் தமிழக வெற்றி கழகம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் விஜய் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார் அமமுக பொதுச் செயலாளரான டிடிவி தினகரன். குறிப்பாக விஜய் தலைமையில் கூட்டணி அமையும் எனக் கூறி இருக்கிறார். இதனால் விஜய் தலைமையில் ஓபிஎஸ் டிடிவி தினகரன் உள்ளிட்டோரின் கட்சிகள் சேரலாம் என சொல்லப்படுகிறது.

டிடிவி தினகரன்
இந்த நிலையில் அரசியலை வேடிக்கை பார்ப்பவர் டிடிவி தினகரன் எனவும் அவரது கருத்துக்களை பரிதாக்க வேண்டாம் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சரான ஆர்பி உதயகுமார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு வந்துள்ளார். வருடத்திற்கு 100 நாட்கள் சட்டமன்றம் நடத்தப்படும் என வாக்குறுதி அளித்த திமுக மொத்தமாக 100 நாட்கள் கூட சட்டமன்றம் நடத்தவில்லை.
ஆர்.பி.உதயகுமார்
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது நேரலை செய்யாமல் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. சட்டமன்றத்தில் கூடுதல் செலவினமான 3,000 கோடி ரூபாய் காட்டப்பட்டுள்ளது, இந்திய அளவில் கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது,. மூலதன செலவு குறித்து எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். நிதியமைச்சர் முழுமையாக பதில் அளிக்கவில்லை. மூலதன செலவிற்காக மின்சார கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை உயர்த்த கூடாது. திமுக ஆட்சி தொடர ஏதாவது ஒரு சாதனையை திமுகவால் கூற முடியுமா?
எடப்பாடி பழனிச்சாமி
திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. ஸ்டாலின் பின்னால் எத்தனை சக்திகள் இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி பின்னால் மக்கள் சக்தியுள்ளது. திமுக ஆட்சியில் இம் என்றால் கைது, ஏன் என்றால் சிறைவாசம். 2026ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்களாட்சி மலர போகிறது. எடப்பாடி பழனிச்சாமி யார் யாருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என முடிவு எடுப்பார். கூட்டணி கட்சி, தேசிய கட்சி, தோழமை கட்சி, துணை நின்ற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து அமைச்சர் பதவிகள் குறித்து முடிவெடுப்பார்.
விஜய் அரசியல்
ஒலிம்பிக்கில் ஓடி தங்கம், வெள்ளி போன்ற பரிசுகள் பெறுவது ஒரு முறை. ஒலிம்பிக்கில் ஓடி பரிசு பெறும் எடப்பாடி பழனிச்சாமியின் வெற்றியை திமுக தட்டி பார்க்க நினைக்கிறது. ஒலிம்பிக்கில் வேடிக்கை பார்க்கும் தினகரன் கருத்துக்கு பதில் சொல்லி பெரிதாக்க வேண்டாம். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக்கும் நைனார் நாகேந்திரனின் கனவு பலிக்காது என தினகரன் கூறியிருக்கிறார். வேடிக்கை பார்க்கும் தினகரன் கருத்துக்கு பதில் சொல்லி பெரிதாக்க வேண்டாம். விஜய் பரிட்சை எழுதிய பின்னர் பார்க்கலாம். விஜய் அனுபவம் உள்ளவர்களுடன் பரிட்சை எழுத வேண்டும்" என கூறியுள்ளார்.
-
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications