ரஜினி 2021ல் கட்சி ஆரம்பிப்பார்.. அப்புறம் அதிமுக திமுகவை வீழ்த்துவார்.. சொல்வது அர்ஜூன் சம்பத்!
திமுக - அதிமுகவை ரஜினிகாந்த் வீழ்த்த போகிறார், 2021ஆம் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை உறுதியாக தொடங்குகிறார் என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
மதுரை: 2021 ல் திமுக அதிமுகவை ரஜினிகாந்த் வீழ்த்த போகிறார் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். 2021 ல் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை உறுதியாக தொடங்குகிறார் என்றும் கூறியுள்ளார் அர்ஜூன் சம்பத்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதில் அவரை விட அதிகம் ஆர்வமாக இருப்பவர் அர்ஜூன் சம்பத். ஆன்மீக அரசியல் என்று சொன்ன உடனே ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்னார் அர்ஜூன் சம்பத். அடிக்கடி ரஜினியின் அரசியல் வருகைப் பற்றியே பேசி வரும் அர்ஜூன் சம்பத், இன்று மதுரையிலும் ரஜினி பற்றி பேசினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கோவில்களுக்கு மிக அருகில் பெரியார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது, திமுக ஆட்சி காலத்தில் கோவில்களுக்கு அருகே சிலை வைக்கப்பட்டது, சிலைகளின் கீழே மனதை புண்படுத்தும் விதமான வார்த்தைகள் உள்ளது.
தமிழகத்தில் கோவில்களுக்கு அருகே உள்ள பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் என்றார். பெரியாருக்கு யூனோஸ்கோ விருது கொடுத்ததாக பாடத்திட்டத்தில் உள்ள பாடத்தை அகற்ற வேண்டும் என்றும் கூறினார். திமுக - கம்யூனிஸ்ட் கட்சிகள் கீழடி அகழாய்வில் ஆன்மிக வரலாற்றை மறைக்க முயற்சி செய்கிறது.

ரஜினி கட்சி தொடங்குவார்
2021ஆம் ஆண்டில் திமுக - அதிமுகவை ரஜினிகாந்த் வீழ்த்த போகிறார், 2021 ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை உறுதியாக தொடங்குகிறார், ரஜினிகாந்த் மதுரையில் இருந்து பிரச்சாரம் தொடங்குவதாக இருந்தது கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

திமுக உடன் தொடர்பு
இட ஒதுக்கீடு தகுதி, திறமையின் அடிப்படையில் வழங்கப்பட்ட வேண்டும். தமிழகத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையில் திமுகவின் ஆதரவாளர்கள் உள்ளனர். கந்தசஷ்டி கவச விவகாரத்தில் திமுகவின் வியூகம் தோல்வி அடைந்துள்ளது. கறுப்பர் கூட்டத்துக்கும், திமுகவுக்கும் தொடர்பு உள்ளது, திமுக மத்திய அரசுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வருகிறது.

பின்புலத்தில் யார்
திமுக ஜாக்டோ - ஜியோ அமைப்பை பின்புலத்தில் இருந்து இயக்குகிறது, சுற்றுச்சூழல் கொள்கையில் இல்லாத ஒரு விசயத்தை இருப்பதாக திமுக விஷம பிரச்சாரம் செய்கிறது என்றும் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

யார் சொன்னது நடக்கும்
ரஜினிகாந்த் நவம்பரில் கட்சி ஆரம்பிப்பார் என்று கராத்தே தியாகராஜன் கூறி வருகிறார். தீபாவளி முடிந்து ரஜினி கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் 2021ஆம் ஆண்டு ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று கூறியுள்ளார் அர்ஜூன் சம்பத். அதுக்குள்ளே சட்டசபை தேர்தலே வந்திருமே.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications