முதல் வரிசையில் மேடம்..தமிழ்நாட்டு மானமே போச்சு! அடுத்து திரிஷா டெபுடி சிஎம்? கொந்தளித்த அதிமுக மாஜி
மதுரை: 100 நாள் தவெக ஆட்சியில் மக்கள் அரசிடமிருந்து விலகி இருக்கத் தொடங்கிவிட்டார்கள். அதற்கு
முதல்வர் விஜய்யின் சுதந்திர தின விழா பேச்சு ஆதாரமாக அமைந்திருக்கிறது எனவும், மேடம் திரிஷா அவர்களை தன் அரியணைக்கு பக்கத்து அரியணையில் துணை முதல்வராக அமர்த்தி விடுவாரோ? என்கிற அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது தமிழகம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," நாட்டின் 80வது சுதந்திர தின விழா, தமிழக அரசின் சார்பில், சென்னை புனித சார்ஜ் கோட்டை நடைபெற்ற விழாவில், முதல்வர் விஜய் தேசிய கொடி ஏற்றி வைத்து, முதன்முதலாக பேசிய பல்வேறு கருத்துக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது ஒரு கருத்து.

"மக்களே, ஓட்டு போட்டு முதல்வரை ஆக்கியாச்சு, நம்ம கடமை முடிஞ்சுச்சு" என என்னை விட்டு ஒதுங்கி விடாதீர்கள். நீங்கள் தான் ஆட்சியாளர்கள்; நாங்கள் அனைவரும் உங்கள் சேவகர்கள். அதில் முக்கியமாக, மக்கள் அரசோடு இணைந்து நிற்க வேண்டும்? ஏன் அப்படி பேசினார் நம்ம முதல்வர்?
ஆர்.பி. உதயகுமார்
100 நாள் தவெக ஆட்சியில் மக்கள் அரசிடமிருந்து விலகி இருக்கத் தொடங்கிவிட்டார்களா? முதல்வர் விஜய்யின் சுதந்திர தின விழா பேச்சு, அதற்கு ஆதாரமாக அமைந்திருக்கிறது. ஏன் முதல்வர் அவர்கள் அப்படி பேசினார்கள்? மக்கள் ஏன் தவெக அரசை விட்டு விலகி இருக்க வேண்டும்? தவெக கற்பனை காவியமான தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை தற்போது பட்ஜெட்டில் கூட அறிவிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறோம்,
100 நாள் ஆட்சி
அறிவித்த பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை, பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணம் ,சட்டம் ஒழுங்கு, அதேபோல போதைப்பொருள் நடமாட்டம், கட்டுப்படுத்துவதில் விஜய் வீர முழக்கமிட்டு தேர்தலுக்கு முன்பாக பேசினார். தற்போது அதில் தொடர்ந்து மௌனம் காத்து வருவது என்பது கோட்டையில் அமர்ந்ததற்கு பின்பு இந்த பிரச்சனைகளில் கோட்டை விட்டாரா? முதல்வர் விஜய் என்கிற ஒரு கோபம் மக்கள் மத்தியிலே ஏற்பட்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
சுதந்திர தின விழா
நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழ்நாட்டின் தன்மானத்தை உலக அரங்கிலே உயர்த்தி இருக்கிறது என்றுதான் நாம் சொல்ல வேண்டும்., ஏனென்று சொன்னால், சுதந்திர தின விழா மேடையில் முதல் வரிசையில் நம்ம முதல்வரை பெற்றெடுத்த தாயும் தந்தைக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பக்கத்திலே விஜய் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு சீட்டு ஒதுக்கப்பட்டிருப்பது. இதன் மூலம் இன்றைய இளைய தலைமுறையான ஜென்சி தலைமுறைக்கு முதல்வர் விஜய் சொல்லும் செய்தி என்ன?
திரிஷா
விஜய் போல் இருக்க வேண்டும் என்று விஜய்யின் பெயரை தன் பெயருக்கு முன்னால் வைத்துக் கொள்கிறார்கள். விஜய் தவறான முன் உதாரணத்தை சுதந்திர தின விழாவில் அரங்கேற்றி இருக்கிறாரே, இதுதான் நமக்கு புரியவில்லை. விஜய்க்கு வாக்களித்த ஜென்சி தலைமுறைக்கு வேண்டுமானால் இது புரிந்திருக்கலாம். புரிந்தால் சொல்லுங்கள், தமிழ்நாட்டு மக்கள் அவரோடு காத்திருக்கிறோம். இதனுடைய அர்த்தம் என்ன?
முதல்வர் விஜய்
இதைப்பற்றி பேசினால், அவதூறு பேசுகிறேன் என்று சொல்லுகிறார்கள். வேற என்ன சொல்ல முடியும்? தாய் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு என்று சொல்லுவதா? இன்னும் என்னவெல்லாம் இந்த தமிழகத்திலே நடக்குமோ? என்று யாருக்கும் தெரியாது. மொத்தத்திலே மக்களே, மாற்றம் கேட்டு வாக்களித்த உங்களுக்கு அறம் சார்ந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் வரலாறு காணாத மாற்றமாக சுதந்திர தின விழாவிலே அன்புக்குரியவர்களை அடையாளப்படுத்தும் முதல் வரிசை அணி வகுப்பை அச்சமின்றி அரங்கேற்றி இருக்கிறார் நம்ம முதல்வர் விஜய் அவர்கள்.
துணை முதல்வர்
கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற தியாகத்தின் வடிவமான படை வீரர்களின் சீர்மிகு அணிவகுப்பினால் முதல்வருக்கு கிடைத்த அந்த முதல் மரியாதையை தனது அன்புக்குரியவர்களுக்கு பங்கீட்டுக் கொடுத்திருக்கிற காட்சி, ஒருவேளை தமிழ்நாட்டின் அரியணையும் தனது அன்புக்குரியவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பாரோ? மேடம் திரிஷா அவர்களை தன் அரியணைக்கு பக்கத்து அரியணையில் துணை முதல்வராக அமர்த்தி விடுவாரோ? என்கிற அதிர்ச்சியிலே உறைந்து போயிருக்கிறது அன்னை தமிழகம். தன்னுடைய அன்புக்குரிய மேடம் திரிஷா அவர்களுக்கு முதல் வரிசையிலே வி.வி.ஐ.பி.அந்தஸ்தில் அரியணையை ஒதுக்கிக் கொடுத்தவர், தன் முதலமைச்சர் அரியாசனத்திற்கு அருகிலேயே துணை முதலமைச்சர் அரியாசனத்தையும் பகிர்ந்து கொடுக்க முன்வருவாரா? என்கிற அதிர்ச்சியிலே அதிர்ந்து போயிருக்கிறது அன்னை தமிழகம்." என்றார்.


Click it and Unblock the Notifications
