செம்ம ஷார்ப் பேச்சு.. திருமங்கலத்தை திரும்பி பார்க்க வைத்த ஆர்.பி.உதயகுமார் மகள் பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தனக்கான நல்லதும் கெட்டதும் பார்க்காமல், உங்கள் வீட்டு பிள்ளை, உங்கள் சகோதரர், உங்களின் நல்லது கெட்டது எல்லாவற்றையும் பார்த்து உங்களுடன் என் தந்தை பங்கேற்பார். அவர் மட்டுமல்ல, அவரது கட்சியினர் மற்றும் எங்கள் குடும்பம் மொத்தமும் உங்களுக்காக பாடுபடுவோம். என் தந்தைக்கு வாக்களியுங்கள் என்று சென்டிமெண்டாக அவரது மகள் பிரியதர்ஷினி வீடு வீடாக வாக்கு சேகரித்து வருவது திருமங்கலம் தொகுதியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Recommended Video

    செம்ம ஷார்ப் பேச்சு.. திருமங்கலத்தை திரும்பி பார்க்க வைத்த ஆர்.பி.உதயகுமார் மகள் பிரச்சாரம் - வீடியோ

    இரண்டாவது முறையாக திருமங்கலத்தில் போட்டியிடும் ஆர்.பி.உதயகுமார், திறந்த வெளி பிரசார வேனில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.மேலும், அமைச்சரின் மகள் பிரியதர்ஷினியும் அவருக்காக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

    மக்களிடம் வாக்கு சேகரித்தபடி அமைச்சர் R.B.உதயகுமார் பேசுகையில், "நான் உங்களிடம் ஒரே ஒரு ரகசியம் கூறுகிறேன் பத்து வருடத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வராவதற்கு ஜாதகம் மிகவும் கெட்டியாக உள்ளதாக கூறிய அமைச்சர், ஜாதகம் என்பது ஜோசியரை வைத்து பார்க்கவில்லை எனவும் மக்களை நம்பியே கூறுகிறோம் என கூறினார்.

    ஜாதகம் சரியாக இல்லை

    ஜாதகம் சரியாக இல்லை

    அந்த ஜாதகத்தில் ஸ்டாலினுக்கு வாய்ப்பே இல்லை என்பதையும், கமல் கட்டத்திற்குள்ளேயே வரவில்லை என்பதையும் அந்த ஜாதகம் சரியாக இருக்கிறது என்றால் மக்களை மட்டும் நம்பி களத்தில் நிற்கிற காரணத்தினால்தான் எங்களின் பக்கம் மக்கள் மக்களின் பக்கம் நாங்கள் ஆதலால் தான் முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் வெள்ளமென திரண்டுள்ளனர் விடிய விடிய கூட்டத்தை திரட்டினாலும் இரண்டு பேர் மட்டும் தான் மற்ற கட்சிக்கு கூட்டமாக வருகின்றனர்

    உதயகுமார் ஷாக்

    உதயகுமார் ஷாக்

    அம்மா அவர்கள் அமைச்சரவையில் அமைச்சர் பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தார்கள் பத்தாண்டுகளில் 3 துறைக்கு அமைச்சராக பணியாற்றி உள்ளேன் நீங்கள் எந்த இடத்திலாவது உதயகுமாரினால் கெட்டுப் போய் விட்டேன் என்று எவரேனும் சொல்வாரானால் நான் அந்த இடத்தில் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்பதை நான் இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மக்கள் தீர்ப்பு

    மக்கள் தீர்ப்பு

    என் மீது உள்நோக்கத்தோடு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எங்களோடு மக்கள் பணியில் போட்டி போட முடியாதவர்கள் அவதூறு பழி சுமத்துகிறார்கள் எங்கள் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள் நாங்கள் காந்திய வழியில் சென்று கொண்டிருக்கிறோம் எத்தனை சோதனை வந்தாலும் தடைகள் வந்தாலும் சத்தியத்தின் வழியில் இந்தத் தேர்தலை வெற்றிகரமாக அமைதிகரமாக தேர்தல் ஆணையம் நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத் தொண்டர்கள் வழங்குவோம் இந்தத் தேர்தலில் உங்களின் தீர்ப்பை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என தலைவணங்கி ஏற்போம் என வாக்கு சேகரித்து பேசினார்.

    உதயகுமார் மகள் பிரச்சாரம்

    உதயகுமார் மகள் பிரச்சாரம்

    இதனிடையே அமைச்சர் உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினி தன் தந்தைக்கு வாக்கு சேகரித்து பேசும் போது, என் அப்பா 24 மணி நேரமும் தொகுதி மக்களின் நலனைப் பற்றி சிந்தித்துக்கொண்டே இருப்பார். திருமங்கலம் தொகுதியில் அனைத்து கிராமங்களிலும் சாலை வசதி, குடிநீர் வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இங்கு 33 கோடியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், தனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று எதை பற்றியும் கவலைப்படாமல் கொரோனா காலத்தில் அரிசி தொகுப்பு, காய்கறி தொகுப்பு, கோதுமை தொகுப்பு, கபசுரக் குடிநீர், முகக் கவசங்கள் ஆகியவற்றை வீடு வீடாக வழங்கினார். உங்கள் வீட்டு பிள்ளையான என் தந்தைக்கு இரட்டை இலை சின்னத்தில் உங்கள் பொற்கரங்களால் வாக்களியுங்கள்" என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+