இனி போலிகள் இல்லை.. பத்திரப் பதிவு நடைமுறையில் வரலாறு காணாத மாற்றம்: அமைச்சர் மூர்த்தி பேட்டி

Subscribe to Oneindia Tamil

மதுரை: பத்திர மோசடிகளை தடுக்க கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் வரலாறு காணாத மாற்றம் என்று தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

Recommended Video

    இனி போலிகள் இல்லை.. பத்திரப் பதிவு நடைமுறையில் வரலாறு காணாத மாற்றம்: அமைச்சர் மூர்த்தி பேட்டி

    ஒருவர் பெயரில் உள்ள வீடு, மனை போன்ற சொத்துக்களை, அவருக்கே தெரியாமல், போலி பத்திரம் தயாரிப்பு அல்லது, ஆள் மாறாட்டம் வாயிலாக பதிவு செய்யும் மோசடிகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.

    பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்து வழக்கு பதிவானாலும், மோசடியாக பதிவான பத்திரம் உடனே ரத்தாவது கிடையாது. நீதிமன்றத்தை அணுகி, விசாரணை நடத்தப்பட்டு நீண்ட காலம் கழித்துதான் பத்திரம் ரத்து செய்யப்படுகிறது. இதனால் உண்மையான நில உரிமையாளர்கள் கடும் அவதிப்படுகிறார்கள்.

     மோசடி பத்திரங்கள் ரத்து

    மோசடி பத்திரங்கள் ரத்து

    இந்த பிரச்சினைக்கு தீர்வாக, மோசடி பத்திரங்களை ரத்து செய்வதற்கான சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு ஒரு மனதாக நிறைவேறியது. மோசடி பத்திரங்கள் குறித்த புகார்களை பதிவாளர் விசாரித்து, சம்பந்தப்பட்ட நபர்களிடம் விளக்கம் கேட்கவும், அதன் அடிப்படையில், அந்த குறிப்பிட்ட பத்திரத்தை ரத்து செய்து பதிவாளர் உத்தரவிடவும் இந்த சட்டம் வகை செய்கிறது. இதனால் போலிகள் ஒழிக்கப்படும்.

    மேல் முறையீடு

    மேல் முறையீடு

    இது தொடர்பான மேல் முறையீடு மனுக்களை, பதிவுத்துறை தலைவர் விசாரித்து, 30 நாட்களுக்குள் பத்திரம் ரத்து குறித்த உத்தரவை பிறப்பிக்கலாம். இந்த உத்தரவு மீது ஆட்சேபம் இருந்தால், 30 நாட்களில் அரசிடம் மேல்முறையீடு செய்ய முடியும். இதற்காக, பதிவு சட்டத்தில், '77ஏ, பி' என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டு, சட்ட மசோதா சட்டசபையில் நேற்று நிறைவேறியது.

    அமைச்சர் மூர்த்தி பேட்டி

    அமைச்சர் மூர்த்தி பேட்டி

    இந்த நிலையில், சட்டசபை முடிந்து சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்: போலி பத்திரம் தயாரிப்பவர்களுக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கவும், போலி பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை பத்திரப்பதிவு துறையிலேயே செய்வதற்கும் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளோம். மேலும் போலி பத்திர தயாரிப்புக்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும்.

     போலி பத்திரங்கள் அதிகரிப்பு

    போலி பத்திரங்கள் அதிகரிப்பு

    கடந்த ஆட்சியில்செய்யப்பட்ட போலி பத்திரங்கள், ஆள்மாறாட்டங்கள், அரசுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் என போலியாக பதிவு செய்துள்ளார்கள் என்பதால் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை புதிதாக கடன் பெறுபவர்கள் நேரில் சென்று பதிய வேண்டும் ஆனால் தற்போது ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

     வரலாறு காணாத மாற்றம்

    வரலாறு காணாத மாற்றம்

    பத்திரப் பதிவுத் துறையில் இது வரலாறு காணாத மாற்றம். சொத்துக்கள் வாங்கியவர்கள், சொத்துக்களை இங்கே விட்டுவிட்டு பணி அல்லது தொழில் நிமித்தமாக வெளிநாட்டில் தங்கியிருப்பவர்களை ஏமாற்றும் மோசடி பேர்வழிகள் பெருகிவிட்டனர். அந்த தவறுகள் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்கு புதிய சட்டத்தை தாக்கல் செய்துள்ளோம். இந்த புதிய சட்டத்தை பொருத்தவரை ஆளுநர், ஜனாதிபதி ஆகியோரிடம் அனுமதி பெற்று, இரண்டு, மூன்று மாதங்களில் அமலுக்கு வரும் என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+